அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50 சதவித எரிபொருள் நிலையங்களை சூரியமயமாக்கும் நோக்கம் – அமைச்சர் தர்மேந்திர பிரதான்!

Filed under: இந்தியா |

அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50 சதவித எரிபொருள் நிலையங்களை சூரியமயமாக்கும் நோக்கம் உள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு சொந்தமான எரிபொருள் நிலையங்களில் 50 சதவிதத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் சூரியமயமாக்கும் நோக்கம் உள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

இதை பற்றி அமைச்சர் பேசியது; சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பதற்கும் மற்றும் பசுமை எரிசக்தி தயாரிப்பதை ஊக்குவிக்கு எண்ணத்திலும் இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் போன்றவற்றுக்கு சொந்தமான எரிபொருள் நிலையத்தில் 270 மெகாவாட் அளவில் மின் உற்பத்திக்கான, சூரிய ஒளி தகடுகள் அமைக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.