அவர் மறைந்தாலும் அவர் குரல் நம்முடன் வாழும் – பாடகர் எஸ்.பி.பி மறைவுக்கு மத்திய அமைச்சர் ஜெய்ஷ்ங்கர் இரங்கல்!

Filed under: இந்தியா |

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று உடல்நல குறைவால் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், போன்றோர் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்த வரிசையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷ்ங்கர் பாடகர் எஸ் பி சுப்ரமணியத்தின் மறைவிற்கு அவருடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இதை பற்றி அவரின் டுவிட்டர் பதிவில்; பாடும் நிலா.. பத்மபூஷண் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. அவர் பாடல்கள் இந்தியாவிலும், வெளிநாட்டிலும் பலருக்கு மகிழ்ச்சியளித்தன.

அவர் மறைந்தாலும் அவர் குரல் நம்முடன் வாழும். அவருடைய குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். ஓம் சாந்தி..!