ரூ.17 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூட பராமரிப்பு பணியினை கயத்தாறு பேரூராட்சி மன்ற தலைவர் சுப்புலட்சுமிஇராஜதுரை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்.

Filed under: தமிழகம் |

தூத்துக்குடி மாவட்டம்கயத்தாறு பேரூராட்சி 15வது வார்டு பாரதிநகரில் பேரூராட்சி இயக்கம் மற்றும் பராமரித்தல் விதியின் கீழ் ரூ.17 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூட பராமரிப்பு பணியினை கயத்தாறு பேரூராட்சி மன்ற தலைவர் சுப்புலட்சுமிஇராஜதுரை அடிக்கல் நாட்டி தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கயத்தார் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னபாண்டியன், தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் அணி இணை ஒருங்கிணைப்பாளர் ராஜதுரை, முஸ்லிம் லீக் மாவட்ட துணைத் தலைவர் சாராமொபைல்மைதீன்,  பாரதி நகர் வார்டு உறுப்பினர் திரு ஆதிலட்சுமி,  பேரூராட்சி உறுப்பினர்கள் நயினார்பாண்டியன் முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஷேக்தாவூத் மற்றும் கருப்பசாமி, சங்கர், வழக்கறிஞர், மாரியப்பன் மற்றும் ஜெனி மற்றும் கழக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொணடு விழாவினை சிறப்பித்தனர்.