சீனா எல்லை பகுதியில் இருந்து வடகொரியாவுக்கு வருபவர்களை சுடுவதற்கு கிம் ஜாங் உன் உத்தரவு!

Filed under: உலகம் |

கொரோனா வைரஸ் பரவுதலை தடுப்பதற்கு சீனாவில் இருந்து வடகொரியாவுக்கு வருபவர்களை சுடுவதற்கு வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸை பற்றி உலக நாடுகள் அனைத்தும் கொரோனா எண்ணிக்கையும் மற்றும் விவரங்களையும் தெரிவித்து வருகிறது. ஆனால், வட கொரியா மட்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் மற்றும் விவரங்களையும் பற்றி எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.

தற்போது தென்கொரியாவில் இருக்கும் அமெரிக்கா படையின் தளபதி ராபர்ட் அம்ரம்ஸ், கொரோனா பரவுதலை அடுத்து ஜனவரி மாதம் சீனாவுடனான எல்லையை முடி உள்ளதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் அவசர நிலையை வடகொரியா பிற[பிற்பித்ததாகவும் மற்றும் சீனாவில் இருந்து சீனாவில் இருந்து வடகொரியாவுக்கு வருபவர்களை சுடுவதற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.