கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 104 காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
உலகையே அச்சுறுத்திக் கொண்டு வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசால் மகாராஷ்டிரா மாநிலம் தான் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 38 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 104 காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் இதுவரை 24 ஆயிரத்து 254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 21 ஆயிரத்து 473 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2,578 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், இதுவரை 253 காவலர்கள் உயிரிழந்துள்ளனர்.