கலிபோர்னியா காட்டு தீயில் மாட்டிக்கொண்ட 200க்கும் மேலானோரை குட்டி விமானம் மூலம் மீட்பு!

Filed under: உலகம் |

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் காட்டுத்தீயில் மாட்டிக்கொண்ட 200க்கும் மேலானோரை சிறிய விமானம் கொண்டு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஃப்ரெஸ்னோ, சான் பெர்னார்டினோ மற்றும் சான் டியாகோ மாவட்டத்தில் மூன்று பெரிய காட்டுத் தீ எரிந்து கொண்டு வருகிறது. க்ரீக் காட்டு தீயினால் ஃப்ரெஸ்னோவில் 36 ஆயிரத்திற்கும் மேலான ஏக்கர் எரிந்துவிட்டது.

பொழுதுபோக்கு தலத்தில் மாமத் நீர்த்தேக்கத்திற்கு அருகே காட்டுத் தீ பரவி வந்ததால், அங்கு இருந்து மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். இதனால் காயம் அடைந்த 20க்கும் மேலானோரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.