பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று உடல்நல குறைவால் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள்,என பலரும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடலை இன்று திருவள்ளூர் தாமரைப்பாக்கத்தில் இருக்கும் அவருடைய பண்ணை இல்லத்தில் இறுதி சடங்குகள் செய்ப்பட்டு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தற்போது நடிகை நயன்தாரா பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதனை பற்றி அவருடைய பதிவில்; தெய்வீகக் குரல் இனி இல்லை என்பதை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது. தலைமுறைகளை தாண்டி நம்மை மகிழ்வித்த திரு எஸ்பி பாலசுப்ரமணியம் சாருடைய குரல், நம்முடைய எல்லா காலங்களுக்கும், காரணங்களும் பொருந்தி இருக்கும்.
நீங்கள் இனி இல்லை என்பதை மனம் நம்ப மறுக்கிறது ஆயினும் உங்கள் குரல் என்றென்றும் நீங்கா புகழுடன் இருக்கும். உங்களுக்கு அஞ்சலி செலுத்தி, எங்களுக்கு நாங்களே ஆறுதல் சொல்லிக் கொள்ளும் இந்த நேரத்தில் கூட உங்கள் பாடல் மட்டுமே பொருந்துகிறது.
எங்கள் வாழ்வில் உங்கள் ஆளுமை அப்படி, நீண்ட காலமாக இடைவிடாமல் உழைத்து எங்களை மகிழ்வித்த உங்களுக்கு மனம் இல்லாமல் பிரியா விடை கொடுக்கிறோம். பாடும் நிலா விண்ணிலிருந்து பாட்டும். உங்களை பிரிந்து வாடும் உங்கள் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும், உங்கள் திரை உலக சகாக்களுக்கும் உலகெங்கும் பரவி இருக்கும் உங்கள் எண்ணற்ற ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த ஆறுதல் செய்தி இது.
இவ்வாறு கூறியுள்ளார்.