முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை – அமைச்சர் விஜயபாஸ்கர்!

Filed under: தமிழகம் |

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு கொரோனா நெகடிவ் வந்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் பேசியது: கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸை எதிராக போராடுகிறோம். 87 பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் இருக்கிறது. இதை கொண்டு இந்தியாவில் அதிகமாக 30,000 பரிசோதனையை செய்ய எட்டியுள்ளோம். இதுவரை 9,19,204 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இன்று மட்டும் 1,358 பேர் குணம் அடைந்துள்ளனர். இதன் எண்ணிக்கை 34,112 ஆக அதிகரித்து உள்ளது. இதன் சதவீதம் 55 ஆக இருகிறது.

தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு கொரோனா நெகடிவ் என வந்துள்ளது. பின்பு சென்னை மருத்துவக் கல்லூரி டீன் மற்றும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் வைரஸ் பாதிப்பு எற்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.