நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் தலைமையில் கொரோனா பாதிப்பு பற்றி மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல், நரேந்திர சிங் தோமர், ராம்விலாஸ் பஸ்வான் போன்றோர் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி நவம்பர் மாதம் வரை ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்த திட்டத்தை அமல்படுத்துவது பற்றியும் மற்றும் கொரோனா சூழல் பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
பிறகு ட்விட்டரில் அமித்ஷா பதிவிட்டார்: அதில் பிரதமர் மோடி அவர்களின் திட்டத்தினால் நம் நாட்டு மக்கள் ஒருவர் கூட பசியால் இருக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், இதன் பின்னர் நாட்டில் மற்ற பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பற்றி மருத்துவக் குழுவுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தியுள்ளார். அதில் ஏய்ம்ஸ் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டனர்.