லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா-சீனா இடையே சமீப காலமாக பதற்றம் நிலவி வருகிறது. கடந்த ஜூன் மாதம் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியது.
இந்தப் பதற்றத்தை குறைப்பதற்காக இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திக் வருகின்றனர். ஆனாலும், இந்த பதற்றம் குறையவில்லை. சீனா தொடர்ந்து அத்துமீருவருவது அதிகரித்துள்ளது.
இதனிடையே லடாக் எல்லை பகுதியில் உள்ள பாங்கோங் ஏரி சமவெளி பகுதியில் இந்திய ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. இதனை இந்திய ராணுவம் மறுத்துள்ளது.
இதை பற்றி இந்தியா ராணுவம் வெளியிட்ட அறிக்கையில்; இந்திய-சீனா எல்லைப் பகுதியில் இந்தியா தரப்பில் எந்த தாக்குதலையும் நடத்தவில்லை என தெரிவித்துள்ளது. சீனா ராணுவம் தான் வானில் துப்பாக்கி சூடு நடத்தியது எனவும் தெரிவித்துள்ளது.