“ஒரே நாடு ஒரே சந்தை” திட்டம் விவசாய மக்களுக்கு உதவியாக இருக்கும் – அமைச்சர் பாண்டியன்!

Filed under: தமிழகம் |

ஒரே நாடு ஒரே சந்தை திட்டத்தின் மூலம் விவசாய மக்கள் விளைவிக்கும் பொருட்களை மற்ற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல எந்த ஒரு வரியும் இல்லை என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

திருநின்றவூர் பகுதியில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அமைச்சர் வழங்கியுள்ளார்.

பின்னர் அமைச்சர் பாண்டியராஜன் பேசியது: விவசாய மக்களை விளைவிக்கும் பொருட்களை பயனாளருக்கு செல்லும் முன்பு 40% வீணாகிவிடுவதாகவும், ஒரே நாடு ஒரே சந்தை திட்டத்தை கொண்டு இது தடுக்கப்பட்டுள்ளது மற்றும் விவசாய மக்கள் பயன் அடைவார்கள் என அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.