கூடோ போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.

Filed under: தமிழகம் |

தமிழக அரசு விளையாட்டு வீரர்களுக்கான 3சதவீத இட ஒதுக்கீட்டில், கூடோ போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.

தமிழ்நாடு தலைமைப் பயிற்சியாளர் திருச்சியில் பேட்டி.

தமிழ்நாடு மாநில அளவிலான கூடோ விளையாட்டு பயிற்சி முகாம், கூடோ தேசிய அளவில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கான பாராட்டு விழா, கூடோ தேசிய போட்டிக்கும், மாநில அளவிலான போட்டிகளுக்கான வீரர்கள் தேர்வு போட்டிகள் மற்றும் மாநில பொதுக்குழு கூட்டம் தமிழ்நாடு கூடோ விளையாட்டுச் சங்க சேர்மன் தங்க.நீலகண்டன் தலைமையில் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள ரயில்வே இன்ஸ்டியூட் அரங்கில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.

இதில் மும்பை மாநிலத்தைச் சேர்ந்த கூடோ இன்டர்நேஷனல், இந்தியாவின் சிறப்பு பயிற்சியாளர் சீகான் ஜாஸ்மின்மக்வானா, மற்றும் பயிற்சியாளர் ரென்சி.பிரியாங்க்ராணா ஆகியோர் பங்கேற்று கூடோ தொழில்நுட்ப பயிற்சிகளை வீரர் வீராங்கனைகளுக்கு
அளித்தனர். மேலும் மே மாதம் 25 – ந் தேதி முதல் 31-ந்தேதி வரை தேசிய அளவில் ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலம், சோலோன் மாவட்டத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளுக்கும், மாநில அளவிலான போட்டிகளுக்கும் வீரர்-வீராங்கனைகள் தேர்வு செயப்பட்டனர்.
மேலும் இந்த பயிற்சி முகாமில் தேசிய அளவிலான நடுவர்களுக்கான பயிற்சியும், பயிற்சியாளர்களுக்கான சிறப்பு பயிற்சியும், வீராங்கனைகளுக்கான கருப்பு பட்டைகளுக்கான தேர்வு நடைபெற்றது. இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. கருப்பு பட்டை தேர்வு பெற்றவர்களுக்கான கருப்பு பட்டையும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் தேசிய அளவில் பதக்கங்களை வென்ற திருச்சி பிரேம்சாய், ஈரோடு மாவட்டம் ஸ்ரீகாந்த், நிஸ்நத் உள்ளிட்ட 8வீரர் -வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

பயிற்சி முகாமில் திருச்சி, தர்மபுரி, சென்னை திருவள்ளூர், நாகை, சேலம், நாமக்கல், உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 150க்கு மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக
ஓய்வு பெற்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முன்னாள் மண்டல மேலாளர் புண்ணியமூர்த்தி,
திருச்சி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சரோஜினி,
சமூக ஆர்வலர் வழக்கறிஞர் திலீப் மற்றும் நில வணிகர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சுபாஷ், தென்னக ரயில்வே ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் பவுல் ரெக்ஸ், ரகுபதி, விழுதுகள் அறக்கட்டளையின் நிறுவனரும், மேஜிசியனுமான, அலெக்ஸ் ராஜா, திருச்சி ராயல் லயன்ஸ் கிளப்பின் சாசன தலைவர் முகமதுசபி
ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த
தமிழ்நாடு கூடோ விளையாட்டு
தலைமை பயிற்சியாளர்,
கந்தமூர்த்தி கூறுகையில்
ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் வீரர் – வீராங்கனைகளுக்கு ஊக்க தொகை வழங்க வேண்டும், அரசு வேலை வாய்ப்புகளில் கூடோ போட்டிகளில் வெற்றி பெறும் வீரர் – வீராங்கனைகளுக்கு விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டும், தமிழக அரசு விளையாட்டு வீரர்களுக்காக வழங்கப்படும் 3சதவீத வேலை வாய்ப்புகளில் கூடோ போட்டிகளில்‌ வெற்றி பெறும் வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது என்றார்.

இப் பயிற்சி முகாமினை தமிழ்நாடு கூடோ விளையாட்டு சங்கத்தின் செயலாளர் சென்சாய்.ஷேக்அப்துல்லா, ஒருங்கிணைப்பாளர் ரென்சி.பிராங்கிள் பென்னி மற்றும் தமிழ்நாடு கூடோ விளையாட்டு சங்கத்தினர் செய்திருந்தனர்.