பாடும் நிலாவான எஸ்.பி.பி-யின் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் – சோகத்தில் திரைத்துறையினர்!

Filed under: சென்னை |

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று உயிரிழந்தார். இவருடைய மறைவிற்கு பல தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

சினிமா துறையில் 50 ஆண்டுகளாக 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் பத்மபூஷன் எஸ் பி பாலசுப்பிரமணியம். இவர் 16 மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு ஆறு தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

கடந்த மாதம் ஐந்தாம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதன்பின் கடந்த மாதம் 13ம் தேதி அவருடன் நிலை உடல் நிலை கவலைக்கிடமாகி விட்டது என எனவும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

https://twitter.com/ysjagan/status/1309413152191176706

இதையடுத்து அவருடைய மகனான பாடகர் எஸ்.பி.பி சரண் தொடர்ந்து வீடியோ மூலம் எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல் நிலை பற்றி தெரிவித்து வந்தார். தீவிர சிகிச்சைக்கு பின்பு கொரோனாவில் இருந்து குணமடைந்த எஸ் பி பாலசுப்பிரமணியம் நுரையீரல் பிரச்சனை காரணத்தினால் இன்று மருத்துவமனையில் காலமானார்.

இந்நிலையில் இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், போன்றோர் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.