இந்தியா அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் டி20 லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். அதில் ஹிட்மேன் ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமித்துள்ளார்.
இந்தியா அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த். இவர் இதுவரை 27 டெஸ்ட், 53 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டார் என்ற காரணத்தில் அவருக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த தடைக் காலம் வரும் செப்டம்பர் மாதம் இறுதியோடு முடிவடைகிறது.
தற்போது ஸ்ரீசாந்த் டி20 போட்டிக்காக இந்தியா லெவேன் அணியை தேர்வு செய்துள்ளார். அதில் துவக்க ஆட்டக்கார்களாக ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் தேர்வாகியுள்ளனர். பின்பு விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, கே.எல் ராகுல் ஆகியோர் பேட்ஸ்மேன்களாக தேர்வாகியுள்ளனர். விக்கெட் கீப்பராவும், பேட்ஸ்மேனாவும் எம்.எஸ் டோனி, ஆல் -ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா, ரவிந்திர ஜடேஜா தேர்வாகியுள்ளனர்.
பின்னர் சுழல் பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ், வேகப்பந்துவீச்சாளர்களாக ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அவரை தேர்வு செய்துள்ளார்.
மேலும், இந்த லெவேன் அணிக்கு ஹிட்மேன் ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமித்துள்ளார்.