கொரோனா இருப்பது தெரிந்தும் திடீர் தலைமறைவான சூர்யா தேவி; மேலும் இரண்டு பிரிவில் வழக்குப் பதிவு!

Filed under: தமிழகம் |

கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர் பால் என்பவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தை பலரும் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். அந்த வகையில் சூர்யா தேவி என்கிற பெண் யூடியூப் சேனலில் அவர்களைப் பற்றி விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை அடுத்து சூர்யா தேவி மீது வடபழனி காவல் நிலையத்தில் அனைத்து மகளிர் பிரிவில் நடிகை வனிதா விஜயகுமார் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் சூர்யா தேவியை விசாரணை செய்து கைது செய்தனர். இதன்பின் மீது ஜாமீனில் வெளியே வந்தார்.

இதன் பின்பு சூர்யா தேவிக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. அந்த முடிவுகள் வெளிவந்த நிலையில் திடீரென சூர்யா தேவி தலைமறைவாகி விட்டார்.

இதனால் கொரோனா தொற்று பரப்பும் வகையில் சூர்யா தேவை செயல்பட்டு வருகிறார் என்று அவர் மீது மேலும் இரண்டு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னை மாநகராட்சி அதிகாரி ரமேஷ் என்பவர் சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் சூர்யாதேவி மீது புகார் கொடுத்துள்ளார்.