Home » Posts tagged with » Netrikkan (Page 119)

சங்கரன்கோவிலில் உங்களை தேடி உங்கள் ஊர் திட்டம்.

Comments Off on சங்கரன்கோவிலில் உங்களை தேடி உங்கள் ஊர் திட்டம்.

சங்கரன்கோவிலில் உங்களை தேடி உங்கள் ஊர் திட்டம். உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் இன்று தென்காசி மாவட்டம்  சங்கரன்கோவில் வட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் T.P.சுரேஷ்குமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் A.K. கமல் கிஷோர் IAS., ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்துத் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சங்கரன்கோவில் வட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். இதன் ஒரு பகுதியாக சங்கரன்கோவில் நகர் காவல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு காவல்துறையினருக்கு […]

Continue reading …

ஹரியானா எல்லையில் விவசாயிகள் கைது!

Comments Off on ஹரியானா எல்லையில் விவசாயிகள் கைது!

ஹரியானா எல்லையில் மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்த விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பஞ்சாப், ஹரியானா உள்பட வட மாநிலங்களில் உள்ள விவசாயிகள் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். டில்லி சலோ என்ற பேரணியை அவர்கள் டில்லியை நோக்கி நடத்திக் கொண்டிருந்தனர். டில்லி எல்லையில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள் என்பதும் அதன் பிறகு நான்கு கட்ட பேச்சுவார்த்தை நடந்தது என்பதும் தெரிந்தது. பேச்சுவார்த்தை […]

Continue reading …

பரத நாட்டிய பின்னணியில் நடிக்கும் ஜெயம் ரவி!

Comments Off on பரத நாட்டிய பின்னணியில் நடிக்கும் ஜெயம் ரவி!
பரத நாட்டிய பின்னணியில் நடிக்கும் ஜெயம் ரவி!

ஜெயம் ரவி மற்றும் மோகன் ராஜா கூட்டணி தமிழ் சினிமாவில் வெற்றிக்கூட்டணியாக அமைந்தது என்றே கூறலாம். இவர்கள் கூட்டணியில் உருவான படங்களில் “தில்லாலங்கடி” தவிர மற்ற அனைத்து படங்களும் ஹிட்டாகின. ஆனால் அவற்றில் “தனி ஒருவன்” தவிர மற்ற அனைத்துமே ரீமேக் படங்கள். அவர்களில் சூப்பர் ஹிட்டான “தனி ஒருவன்” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. முதல் பாகத்தில் நடித்த ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றனர். […]

Continue reading …

தயாரிப்பாளர் ஆரம்பிக்கும் புதிய ஓடிடி நிறுவனம்!

Comments Off on தயாரிப்பாளர் ஆரம்பிக்கும் புதிய ஓடிடி நிறுவனம்!
தயாரிப்பாளர் ஆரம்பிக்கும் புதிய ஓடிடி நிறுவனம்!

மதுரை அன்புச்செழியன் தமிழ் சினிமாவில் பைனான்சியராக, தயாரிப்பாளராக முன்னணியில் இருப்பவர். தமிழ் சினிமாவில் தயாராகும் மிகப்பெரிய பட்ஜெட் படங்களுக்கும் அவரிடம்தான் பைனான்ஸ் பெறுகிறார்கள். சமீபகாலமாக அவர் சினிமாவில் இருந்து விலகி இருப்பதாக ஒரு தோற்றம் உள்ளது. இந்நிலையில் அவர் இப்போது புதிதாக ஒரு ஓடிடியை தொடங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. அதற்கான ஆரம்பகட்ட வேலைகள் நடந்து வருவதாக தெரிகிறது. உலகளவில் திரையரங்குகளுக்கு சற்றேறக்குறைய இணையாக ஓடிடிகள் வியாபாரம் செய்கின்றன. நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற சர்வதேச […]

Continue reading …

ராயன் படம் குறித்து செல்வராகவன் பதில்!

Comments Off on ராயன் படம் குறித்து செல்வராகவன் பதில்!

நடிகர் தனுஷ் தனது 50வது படமான “ராயன்” திரைப்படத்தை தானே இயக்கி மின்னல் வேகத்தில் ஷூட்டிங்கை முடித்துள்ளார். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தில் தனுஷோடு எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அமலா பால் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்காக மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய தனுஷ் மொத்த காட்சிகளையும் 110 நாட்களில் முடித்துள்ளார். இப்படத்தில் தனுஷ் அண்ணனாகவும், காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோர் […]

Continue reading …

லெஜண்ட் சரவணன் நடிப்பில் புதிய படம்?

Comments Off on லெஜண்ட் சரவணன் நடிப்பில் புதிய படம்?

கடந்த ஆண்டு சரவணா ஸ்டோர் அண்ணாச்சி சரவணன் நடித்த “தி லெஜன்ட்” திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் ஓரளவு பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் எதிர்பார்த்த அளவு வசூலை பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் அவரின் தோற்றம் உருவ கேலிகளுக்கும் ஆளானது. அவர் தன்னுடைய அடுத்தப் படத்துக்காக பல கதைகளைக் கேட்டுவருவதாக கூறப்பட்டது. இயக்குனர் துரை செந்தில்குமார் சொன்ன கதைக்கு சம்மதம் சொல்லியுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது சூரியை வைத்து “கருடன்” படத்தை இயக்கி வரும் துரை செந்தில்குமார் அத்திரைப்படத்தை முடித்த பின்னர் “லெஜண்ட் […]

Continue reading …

மின்கசிவால் தீப்பிடித்த குடிசை வீடு!

Comments Off on மின்கசிவால் தீப்பிடித்த குடிசை வீடு!

திருச்செங்கோடு ராஜலிங்கம் பேட்டையில் வசித்து வரும் செல்வராஜ் 45 மற்றும் அவரது மனைவி ராணி இருவரும் ஜவுளி பீஸ் மடிக்கும் வேலை செய்து வருகின்றனர். வீட்டின் கீழ் பகுதியில் பெற்றோர்களும், வீட்டின் மொட்டை மாடியில் குடிசை போட்டு செல்வராஜும் அவரது மனைவியும் வசிக்கின்றனர். இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் எதுவும் இல்லை. வீட்டில் பாட்டி வீட்டு சிலிண்டர் உட்பட மூன்று சிலிண்டர்கள் வைத்திருந்துள்ளனர். அதில் இரண்டு சிலிண்டர்கள் காலியாக இருந்த நிலையில் மூன்றாவது சிலிண்டரும் குறைவான கேஸ் மட்டுமே […]

Continue reading …

சென்னை பரங்கிமலை பகுதியில் போக்குவரத்து மாற்றமா?

Comments Off on சென்னை பரங்கிமலை பகுதியில் போக்குவரத்து மாற்றமா?
சென்னை பரங்கிமலை பகுதியில் போக்குவரத்து மாற்றமா?

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதன் காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வகையில் மெட்ரோ பணிகள் காரணமாக பரங்கிமலை பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இன்று முதல் ஒரு வார காலத்திற்கு சென்னை மெட்ரோ ரெயில் கட்டுமானப் பணிகள் பரங்கிமலை பகுதியில் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஜி.எஸ்.டி சாலையில் இருந்து வரும் வாகனங்கள் வழக்கம் போல் ஆலந்தூர் சுரங்கப்பாதையை நோக்கி […]

Continue reading …

மர்மமான முறையில் கூலி தொழிலாளி பலி!

Comments Off on மர்மமான முறையில் கூலி தொழிலாளி பலி!

மது போதை நோய் மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தில் கூலித் தொழிலாளி சிகிச்சை பெற்றுவந்தார். அவர் தற்போது மர்மமான முறையில் இறந்துள்ளார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம்‌ எம்.எஸ்.பி.நகரில் ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தியம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் கார்த்திகேயன் (28). இவர் அப்பகுதியில் வெற்றி லைப் கேர் பவுண்டேஷன் என்ற பெயரில் கடந்த 6-மாதங்களுக்கு முன்பு குடிபோதை மறுவாழ்வு மையத்தை தொடங்கினார். இந்த மையத்தில் மனநல பாதித்தவர்கள் மற்றும் குடிபோதைக்கு அடிமையானவர்கள் என 33- பேர்கள் தங்கி […]

Continue reading …

வேளாண் பட்ஜெட் குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

Comments Off on வேளாண் பட்ஜெட் குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது குறித்து விவசாயிகளுக்கு அதிமுக செய்தது என்ன? திமுக செய்யாதது என்ன? என விமர்சித்துள்ளார். இதுகுறித்து எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம், “வேளாண்மை துறை நிதிநிலை அறிக்கையில் பல்வேறு துறைகள் ஒன்றாக சேர்த்து ஊரகத்துறை வனத்துறை மீன்வளத்துறை, பால் வளத்துறை. அனைத்தையும் ஒன்றாக நினைத்து வேளாண் நிதி நிலை அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறார்கள் வேளாண் துறைக்கு தனியாக நிதி நிலை அறிக்கையில் ஒன்றும் இல்லை. திமுக ஆட்சிக்கு வந்தால் […]

Continue reading …