
டில்லியில் மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு காரணமாக அவரது வீட்டில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 95. தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு வந்த போது இவரது வாதத் திறமையால் தான் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு ஆதரவாக இவர் வாதிட்டார். ஆனாலும் தமிழ்நாடு அரசுக்கு சாதகமாகவே தீர்ப்பு கிடைத்தது. மத்திய அரசு இவருக்கு 1991-ல் பத்ம […]
Continue reading …
நடிகர் கவின் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் “கலகலப்பு” திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தில் நாயகனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இச்செய்தியை சுந்தர் சி தரப்பு மறுத்துள்ளது. “கலகலப்பு” மற்றும் “கலகலப்பு 2” ஆகிய இரண்டு படங்களும் சுந்தர் சி இயக்கத்தில் உருவானது.இத்திரைப்படங்கள் நல்ல வெற்றி பெற்றது. விரைவில் “கலகலப்பு 3” உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கான கதையை சுந்தர் சி எழுதி முடித்து விட்டதாகவும் விரைவில் இந்த படத்திற்கான அறிவிப்பு வரும் என்றும் கூறப்படுகிறது. […]
Continue reading …
ஜீ ஓடிடி தளத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற திரைப்படம் வெளியான 3 நாட்களில் சாதனை படைத்துள்ளது. சுதிப்தோ சென் இயக்கத்தில், அதா சர்மா, யோகிதா பிகானி, சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி உள்ளிட்டோர் நடிப்பில் கடந்தாண்டு மே மாதம் 5ம் தேதி ரிஸீஸான படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இப்படம் ரிலீசாகி பெரும் சர்ச்சையை சந்தித்தது. கேரளாவில் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பாக ஹிந்து பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் இப்படத்தின் […]
Continue reading …
மத்திய அமைச்சர் விரைவில் ஆண்டிற்கு 2 பொதுத்தேர்வுகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். பாஜக ஆட்சி மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான நடந்து வருகிறது. விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளது. தற்போது ஆண்டிற்கு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒருமுறை பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இனி, ஆண்டிற்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், வரும் 2025 -2026ம் கல்வியாண்டு முதல் இது அமல்படுத்தப்படும் என மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மேலும், பள்ளி […]
Continue reading …
புதிய சமூக வலைதளமான KYN அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. HYPER-LOCAL முறையில் உருவாகியுள்ள இந்த செயலி, சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைக்கும் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. இன்று தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் Dr.பழனிவேல் தியாகராஜன் KYN செயலியைத் தொடங்கி வைத்தார். KYN என்பதன் விரிவாக்கம் Know Your Neighbourhood. இது நமது சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் HYPERLOCAL முறையில் இது ஒன்றிணைக்கும். இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் Dr. PTR […]
Continue reading …
பத்தாம் வகுப்பு மாணவி தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக நீண்ட நேரம் கண்விழித்து படிக்க மாத்திரை உட்கொண்டதால் மாணவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இறுதி தேர்வு குறித்து பள்ளிகளில் மாணவர்களுக்கான நெறிமுறைகள் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. முழு ஆண்டு தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்பது மாணவ, மாணவர்களின் கனவாக உள்ளது. அதற்காக இரவில் நீண்ட நேரம் படித்து வருகின்றனர். அவ்வகையில் லக்னோவில் பொதுத்தேர்வுக்கு நீண்ட நேரம் […]
Continue reading …
காசா மக்கள் இஸ்ரேல் தாக்குதலினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து காசாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 29 ஆயிரத்தை தாண்டியுள்ளது. போர் காரணமாக உணவு, தண்ணீர், மருந்து போன்றவை கிடைக்காமல் காசா மக்கள் தவித்து வருகின்றனர். பல ஆண்டுகளாக இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே மோதல் நீடித்து வருகிறது. குறிப்பாக பாலஸ்தீனத்தின் காசா பகுதியினை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர். கடந்தாண்டு இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி ஹமாஸ் அமைப்பு தாக்குதலை […]
Continue reading …
தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் ஓடிடி பிரச்சனைக்கு முடிவு காணாவிட்டால் தியேட்டர்களை மூடிவிடுவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திரையரங்குகளில் மாஸ் நடிகர்களின் படங்களை தவிர மற்ற படங்கள் போதிய வசூல் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு ஒரே காரணம் திரைப்படம் வெளியான ஒரே மாதத்தில் ஓடிடிக்கு வந்துவிடும் என்பதால் ஓடிடியில் பார்த்துக் கொள்ளலாம் என்று பொதுமக்கள் திரையரங்குகளுக்கு வருவதில்லை என்று கூறப்பட்டுள்ளது. எனவே ஓடிடியில் ஒரே மாதத்தில் திரைப்படங்களை வெளியிடும் போக்கை […]
Continue reading …
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2023 ஜூன் 14ல் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை பிப்ரவரி 16ல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்காக ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டிருந்தது. அமலாக்கத்துறை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் […]
Continue reading …
பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வேளாண் பட்ஜெட் ஏமாற்றத்தை அளிக்கிறது என தெரிவித்துள்ளார். இன்று விவசாயத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தமிழக சட்டமன்றத்தில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள் இந்த பட்ஜெட்டை வரவேற்று வருகின்றன. வேளாண் பட்ஜெட் குறித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், “வேளாண் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் எதுவுமில்லை, வேளாண் பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கும் திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இல்லை. மேலும் தமிழ்நாட்டில் வேளாண் நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது. […]
Continue reading …