Home » Posts tagged with » Netrikkan (Page 122)

கோலி – அனுஷ்கா தம்பதியருக்காக கோயங்கா போட்ட ட்வீட்!

Comments Off on கோலி – அனுஷ்கா தம்பதியருக்காக கோயங்கா போட்ட ட்வீட்!

முன்னாள் கேப்டன் விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து முதலில் விலகினார். பின்னர் அனைத்து போட்டிகளிலிருந்தும் விலகினார். பிசிசிஐ தரப்பை கடைசி வரை தொடர்பு கொள்ளாமல் இருந்த கோலி, கடைசி கட்டத்தில் போனில் தான் முழு தொடரிலிருந்தும் விலகிக் கொள்வதாக கூறினாராம். அதனால் அவருக்கு மாற்று வீரராக சர்பராஸ் கானை அணியில் இணைத்துள்ளனர். கோலி தன்னுடைய கிரிக்கெட் கேரியரில் ஒரு முக்கியமான டெஸ்ட் தொடரை இதுவரை இழந்ததே இல்லை. ஐபிஎல் […]

Continue reading …

திருநங்கையாக நடிக்கும் சிம்பு!

Comments Off on திருநங்கையாக நடிக்கும் சிம்பு!

தேசிங் பெரியசாமி இயக்கத்தில் உருவாகவிருக்கும் திரைப்படத்தில் சிம்பு நடிக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்துவருகிறது. சிம்பு படத்துக்காக நீளமாக முடிவளர்த்து கெட்டப்பை எல்லாம் மாற்றியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டெஸ்ட் ஷூட் ரகசியமாக சென்னையில் நடந்து முடிந்துள்ளது. விரைவில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த வீடியோவோடு வெளியாகும் என சொல்லப்படுகிறது. ஆனால் அப்படி எந்த வீடியோவும் வெளியிடவில்லை. இப்போது முன்தயாரிப்பு பணிகள் நடந்துவரும் நிலையில் […]

Continue reading …

சைரன் படத்தின் முதல்நாள் கலெக்‌ஷன் எவ்வளவு?

Comments Off on சைரன் படத்தின் முதல்நாள் கலெக்‌ஷன் எவ்வளவு?

தற்போது ஜெயம் ரவி ஒன்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படமும், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நித்யா மேனனோடு ஒரு படத்திலும் நடிக்கிறார். இந்த படங்களுக்கு இடையில் ஜெயம் ரவி கீர்த்தி சுரேஷோடு “சைரன்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீசாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. சமீபகாலமாக ஜெயம் ரவியின் அகிலன் மற்றும் இறைவன் ஆகிய திரைப்படங்கள் மோசமான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றன. “சைரன்” இந்த […]

Continue reading …

“லவ்வர்” படத்தை பாராட்டிய செல்வராகவன்!

Comments Off on “லவ்வர்” படத்தை பாராட்டிய செல்வராகவன்!

“குட்நைட்” திரைப்படம் கடந்த ஆண்டு மே மாதம் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது. பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீசான இத்திரைப்படம் பலரது பாராட்டுகளையும் குவித்தது. அதே தயாரிப்பு நிறுவனத்துக்கு மணிகண்டன் “லவ்வர்” திரைப்படத்தில் நடித்துள்ளார். படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்ட போதே ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. படத்தில் டாக்ஸிக் காதலராக மணிகண்டன் நடித்திருந்தார். தன்னுடைய கேரியர், காதல் வாழ்க்கை தொடர்பான தடுமாற்றங்களில் அவர் எவ்வளவு மோசமானவராக நடந்து கொள்கிறார், அதில் […]

Continue reading …

ரேடார் கட்டமைப்பு குறித்து பொன்ராஜ் வலியுறுத்தல்!

Comments Off on ரேடார் கட்டமைப்பு குறித்து பொன்ராஜ் வலியுறுத்தல்!

அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் வானிலை மாற்றங்களை கண்டறிய ராக்கெட் மட்டும் போதாது ரேடார் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளார். முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற கலந்து கொண்டார். பின் செய்தியாளர்களிடம் அவர், “இன்சாட் 3டிஎஸ் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்ட உள்ளது. நமக்கு பேரிடர் காலங்களில் வானிலை மாற்றங்களால் ஏற்படும் விளைவுகளை முன்கூட்டியே கணித்து சொல்லும் அர்ப்புதமான வாய்ப்பாக இந்த […]

Continue reading …

பாஜகவுடன் தேமுதிக கூட்டணி வேண்டாம்; பிரேமலதா அதிர்ச்சி!

Comments Off on பாஜகவுடன் தேமுதிக கூட்டணி வேண்டாம்; பிரேமலதா அதிர்ச்சி!

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் பாஜக உடன் கூட்டணி வேண்டாம் என திடீரென எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிர்ச்சியடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. பாஜகவுடன் தேமுதிக அல்லது அதிமுக வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்கும் என்று இரு தரப்பினரிடமும் ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 14 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதி கொடுக்கும் அணியுடன் மட்டுமே கூட்டணி என்று பிரேமலதா அறிவித்திருந்தாலும் மூன்று தொகுதிகள் கொடுக்க மட்டுமே பாஜக மற்றும் அதிமுக […]

Continue reading …

பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் முக்கிய ஆலோசனை!

Comments Off on பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் முக்கிய ஆலோசனை!

டில்லியில் இன்று பாஜகவின் இரண்டு நாள் தேசிய கவுன்சிலர் கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் நாடு முழுவதிலிருந்து 11,500 நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். மிக விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. மத்தியில் ஆளும் பாஜக, மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றது. இதையொட்டி பாஜக இரண்டு நாள் தேசிய கவுன்சில் கூட்டம் டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று காலை தொடங்கியது. […]

Continue reading …

பட்டாசு ஆலை வெடிவிபத்து! 9 பேர் பலி!

Comments Off on பட்டாசு ஆலை வெடிவிபத்து! 9 பேர் பலி!

சமீப காலமாக தொடர்ந்து பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து ஏற்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகிலுள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பெண்கள் 4 ஆண்கள் உள்ளிட்ட 9 பேர் பலியாகி உள்ளனர். விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகே முத்துசாமிபுரத்தில் விஜய் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்படுகிறது. இன்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக திடீரென மருந்துகள் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இதில் 5 […]

Continue reading …

திமுகவுடன் தான் கூட்டணி! துரைவைகோ உறுதி!

Comments Off on திமுகவுடன் தான் கூட்டணி! துரைவைகோ உறுதி!

மதிமுக தேர்தல் நிதியளிப்புக் கூட்டம் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரைவைகோ பங்கேற்றார். நிகழ்ச்சியில் துரை வைகோ, “தேர்தல் பத்திரம் மூலமாக தேர்தல் நிதியை கார்ப்பரேட் நிறுவனங்கள் பாஜக விற்கு கொடுத்துள்ளதாகவும் தேர்தல் பத்திரம் கொடுப்பது செல்லாது எனவும் 2018 முதல் இன்று வரை பெறபட்ட நிதியை திருப்பி செலுத்த வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பாஜக அரசுக்கு கொடுத்திருக்க கூடிய சம்மட்டி […]

Continue reading …

செந்தில் பாலாஜியின் காவல் 21வது முறை நீட்டிப்பு!

Comments Off on செந்தில் பாலாஜியின் காவல் 21வது முறை நீட்டிப்பு!

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் பிப்ரவரி 20-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை எதிர்ப்பு தெரிவித்து வருவதால், அவரது நீதிமன்ற […]

Continue reading …