
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பியதும், முதலமைச்சரை சந்திக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. வரும் 12ம் தேதி சென்னை திரும்பும் கமல்ஹாசன் அடுத்த நாளே முதலமைச்சரை சந்திக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் 2 தொகுதிகளை கேட்பதாக தகவல் வெளியானாலும், இதுவரை அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறாத நிலையில், 12ம் தேதிக்கு […]
Continue reading …
மாநில மகளிர் ஆணையம் சென்னையில் திமுக எம்எல்ஏ மகன் வீட்டில் பணிப்பெண் துன்புறுத்தப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை செய்யப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. சென்னை பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான கருணாநிதி மகன் ஆண்டோ வீட்டில், 18 வயது இளம் பெண் ஒருவர், பணிபுரிந்து வந்தார். அப்பெண்ணை ஆண்டோவும், அவரது மனைவி மெரலினாவும் சேர்ந்து சித்திரவதை செய்ததாகவும், அந்தப் பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து கடுமையாக தாக்கியும், கைகளில் சிகரெட்டால் சூடு வைத்தும், துன்புறுத்தியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் பயணம் வென்றது போல தேர்தல் களத்தில் இந்தியாவின் வெற்றியும் அமையும் என்று தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் சென்றிருந்தார். இன்று தமிழகம் திரும்பிய அவர் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “ஸ்பெயின் பயணம் வெற்றி பெற்றது போல இந்தியாவின் வெற்றி அமையும். மாற்று மதத்தினரிடம் வெறுப்பை விதைத்து, தேர்தல் லாபம் தேடும் அரசியல் ஸ்பெயினில் இல்லை. வேற்று மத மன்னர்களால் கட்டப்பட்ட கட்டிடத்தை ஆட்சியாளர்கள் இடித்து தகர்க்கவில்லை. […]
Continue reading …
“என்.ஜி.கே” மற்றும் “நானே வருவேன்” ஆகிய படங்கள் செல்வராகவன் இயக்கத்தில் சமீபத்தில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் மோசமான விமர்சனங்களையும் பெற்று வருகின்றன. அடுத்து அவர் தன்னுடைய எவர்க்ரீன் ஹிட் படமான “7ஜி ரெயின்போ காலணி” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். பைனான்ஸ் பிரச்சனை காரணமாக அந்த படம் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. செல்வராகவன் நடிகராக அறிமுகமான ‘சாணிக்காயிதம்’ மற்றும் ‘பீஸ்ட்’ ஆகிய திரைப்படங்கள் அவருக்கு பாராட்டுகளைப் பெற்றுத்தந்தன. அடுத்து “பகாசூரன்” திரைப்படம் ரிலீசாகி […]
Continue reading …
நடிகை ராஷ்மிகா மந்தனா கடந்த 2016ம் ஆண்டு “க்ரிக் பார்டி” என்ற கன்னட சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அல்லு அர்ஜூனுடன் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த “புஷ்பா” முதல் பாகம், விஜய்யுடன் இணைந்து நடித்த “வாரிசு” ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. அவர் பாலிவுட்டில் நடிகர் ரன்பீர் கபீருடன் இணைந்து நடித்த “அனிமல்” படம் விமர்சனங்களை தாண்டி வசூலில் சாதனையை படைத்தது. கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளை தாண்டி, பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக வலம் […]
Continue reading …
“பைட்டர்” திரைப்படத்தில் விமானப்படை சீருடையில் முத்தம் கொடுக்கப்பட்டதால் விமானப்படை அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஹிருத்திக் ரோசன் மற்றும் தீபிகா படுகோன் நடித்த படம் “பைட்டர்.” இத்திரைப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியிருந்தார். இப்படத்தில் விமானப்படை சீருடையில் முத்தம் கொடுக்கப்பட்டதால் இப்படத்திற்கு விமானப்படை அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். “பைட்டர்” இந்திப் படத்தில் விமானப்படை சீருடையில் முத்தம் கொடுக்கப்பட்ட நிலையில், விமானப்படையை அவமதித்துவிட்டதாகக் கூறி, இதற்கு விளக்கம் கேட்டு, அசாமை சேர்ந்த விமானப்படை அதிகாரி சவுமியா தீப் தாஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். […]
Continue reading …
சமூக வலைதளங்களில் சென்னை மெட்ரோ ரயில் கூலி தொழிலாளர்கள் பயணம் செய்ய வந்தபோது அவர்கள் தடுக்கப்பட்டதாக செய்திகள் பரவி வருகிறது. இது குறித்து மெட்ரோ நிர்வாகம் விளக்கமளித்தது. இன்று காலை சென்னை மெட்ரோ ரயில் கூலி தொழிலாளர்கள் சிலர் தங்களுடைய வேலைக்கான பொருட்களுடன் மெட்ரோ ரயில் பயணம் செய்ய வந்த போது அவர்கள் மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகளால் தடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. இச்செய்தியை அடுத்து மெட்ரோ நிர்வாகத்திற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது […]
Continue reading …
வருகிற தேர்தலில் திமுகவின் முகமூடியை மக்கள் கிழித்தெறிவார்கள் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இன்று மக்களவையில் திமுக-வின் போலி திராவிட மாடல் சமூகநீதி பிம்பம் வெளிப்பட்டுள்ளது என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பட்டியலின மக்களின் வாக்குகளுக்காக மட்டுமே அரசியல் செய்பவர்கள் திமுக-வைச் சேர்ந்த இந்த போலி திராவிட மாடல் சமூகநீதிக்காரர்கள். பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்கும், அவர்களுக்குத் தேவையான திட்டங்களுக்கும் ஏற்ப பணி செய்ய […]
Continue reading …
உத்தவ் தாக்கரே இதுவரை பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். திடீரென நான் மோடிக்கு எதிரியில்லை என பேசியிருப்பது இந்தியா கூட்டணியினரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. நிதிஷ்குமார் ஏற்கனவே இந்தியா கூட்டணியிலிருந்து விலகி உள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர் தங்கள் மாநிலங்களில் தனித்து போட்டி என அறிவித்துள்ளனர். சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே “நான் மோடிக்கு எதிரியில்லை, ஆனால் மோடி தான் என்னை எதிரியாக பார்த்து வருகிறார். மோடிக்கு பிரச்சனை ஏற்பட்ட […]
Continue reading …
அரசு பேருந்து சென்னை, அமைந்தகரை அருகே சென்றுக்கொண்டிருந்த போது, பேருந்தில் பலகை உடைந்து பெண் ஒருவர் கீழே விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் அந்த பயணி உயிர் தப்பினார். திருவேற்காடு செல்லும் பெண்களுக்கான கட்டணமில்லா அரசு பேருந்து ஒன்று சென்னை அமைந்தகரை அருகே சென்று கொண்டிருந்தது. அப்பேருந்தில் இருந்த ஓட்டையை பலகை வைத்து மூடியுள்ளனர். அப்பேருந்தில் பயணித்த பெண் ஒருவர், பலகை உடைந்து அந்த ஓட்டை வழியாக கீழே விழுந்தார். அப்போது அந்த […]
Continue reading …