
பேருந்துகளில் டிக்கெட்டின்றி பயணித்த 4,223 பயணிகளிடமிருந்து அபராதத் தொகை ரூ.4,71,600- வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில், உரிய பயணச்சீட்டு மற்றும் மாநகர் போக்குவரத்துக் கழகத்தால் வழங்கப்பட்டுள்ள பயண அட்டை இல்லாமல் பயணம் செய்வது, மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் 178(B) பிரிவின் படி தண்டனைக்குரிய குற்றமாகும். இதனால், மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. இதனை வலியுறுத்தி, பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்வதை […]
Continue reading …
பாஜக தலைவர் அண்ணாமலை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குச் செல்லும் போக்குவரத்துக்கான கட்டணம் அதிகம்- என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “கோயம்பேடு பேருந்து நிலையத்தை மையப்படுத்தி, மெட்ரோ ரயில் நிலையம், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கு இத்தனை ஆண்டுகளாகப் பல ஆயிரம் கோடி செலவு செய்துவிட்டு, பயணிகளுக்குத் தேவையான எந்த அடிப்படை வசதிகளும் செய்து முடிக்கப்பட்டாத கிளாம்பாக்கத்திற்கு, பேருந்து நிலையத்தை உடனே மாற்றுவோம் எனும் அடிமுட்டாள்தனமான செயல்பாட்டை என்னவென்று சொல்வது? கோயம்பேடு சுற்றியுள்ள ஆட்டோ ஓட்டுநர்கள், சிறு […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி ஸ்பெயினில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இன்று முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. சென்னையிலுள்ள அவரது நினைவிடத்தில் திமுக அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அங்கு அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இது தொடர்பான புகைப்படத்தை தனது எக்ஸ் […]
Continue reading …
அமைச்சர் அன்பில் மகேஷ் “நடிகர் விஜய் எங்களுக்கு அருமையான அண்ணன். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எங்களுக்கு அவரை அறிமுகப்படுத்தி உள்ளார்” என்றும் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகம் என்ற தனது கட்சிப் பெயரினை நடிகர் விஜய் நேற்று அறிவித்து அரசியலுக்கு வருவதை உறுதி செய்துள்ளார். விஜய் அரசியலுக்கு வந்ததை அரசியல் பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில் நேற்று அமைச்சர் உதயநிதி, “விஜய்யின் அரசியல் வருகைக்கு தனது வாழ்த்துக்கள், இந்திய ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு […]
Continue reading …
பிரதமர் மோடி அத்வானிக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படும் எனவும் இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர் செய்த பங்களிப்பு மகத்தானது எனவும் தெரிவித்துள்ளார். பாரத ரத்னா விருது பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள அத்வானியை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தேன். எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதைப் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நம் காலத்தின் […]
Continue reading …
நடிகர் ஜீவா இந்திய சினிமாவில் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். திரையுலகில் இன்று 21 வருடங்களை நிறைவு செய்கிறார். வெற்றிகரமாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய நடிகர் ஜீவா, அடுத்த கட்டமாக இசை தயாரிப்பில் இறங்கியுள்ளார். அவரது ‘டெஃப் ஃப்ராக்ஸ்’ ரெக்கார்ட்ஸ் மியூசிக் லேபிள் என்ற புதிய முயற்சியின் துவக்க விழா, சுதந்திரக் கலைஞர்களுக்கு அர்ப்பணித்து, அவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான தளத்தை வழங்கும் நிகழ்ச்சி, ஊடகங்கள் மற்றும் நடிகர்கள் ஜித்தன் ரமேஷ், ஆர்யா, கார்த்தி, […]
Continue reading …
என்.ஐ.ஏ என்ற தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சென்னை உள்பட தமிழகத்தின் சில மாவட்டங்களில் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். பிற நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பினார் இந்த பகுதிகளில் ஊடுருவு இருப்பதாக வெளிவந்த தகவலை அடுத்து இந்த சோதனையை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இத்தகவல் உறுதி செய்யப்படவில்லை என்றாலும் சந்தேகத்தின் அடிப்படையில் தற்போது […]
Continue reading …
பல்வேறு நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தின் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றது. அந்த வரிசையில் ஆன்லைன் கட்டண நிறுவனமான PayPal பணி நீக்கத்தை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு நேரத்தில் ஏராளமான நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கை எடுத்தது என்பதும் இதில் மைக்ரோசாப்ட், கூகுள், பேஸ்புக் உள்பட பல நிறுவனங்கள் இருந்தன. தற்போது மீண்டும் வருமானத்தை அதிகரிக்கவும் நஷ்டத்தை குறைக்கவும் ஒரு சில நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. அவ்வகையில் உலகின் […]
Continue reading …
இன்று தமிழகம் முழுவதும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுத்தும் நிகழ்வுகள் மீது கவனம் செலுத்தும் தேசிய புலனாய்வு முகமை பல இடங்களில் அவ்வபோது திடீர் சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. அவ்வகையில் இன்று காலை முதலே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழ்நாட்டின் சென்னை, தூத்துக்குடி, குமரி, திருநெல்வேலி என பல பகுதிகளில் பல நபர்கள் வீடு, அலுவலகங்களில் அதிரடி சோதனையில் […]
Continue reading …
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திமுக காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த வருகிற 13-ம் தேதி சென்னை வருகிறார். அன்றைய தினம் தொகுதி பங்கீடு தொடர்பான இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையிலும் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு […]
Continue reading …