Home » Posts tagged with » Netrikkan (Page 132)

நாடாளுமன்ற கூட்டத்திலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

Comments Off on நாடாளுமன்ற கூட்டத்திலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

நாடாளுமன்றத்தில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஜனவரி 31ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இதையடுத்து மத்திய இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தலைவர் திரௌபதி முர்மு உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் மாநில முன்னாள் […]

Continue reading …

காங்கிரஸ் எம்.பி. மன்னிப்பு கேட்க வேண்டும்;- பியூஸ் கோயல்!

Comments Off on காங்கிரஸ் எம்.பி. மன்னிப்பு கேட்க வேண்டும்;- பியூஸ் கோயல்!

காங்கிரஸ் எம்.பி., எ.டி.கே.சுரேஷ்குமார் மத்திய பாஜக அரசின் இடைக்கால பட்ஜெட் பற்றி நேற்று கருத்துக் கூறிய தனிநாடு கோர வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகக் கூறியிருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, நாட்டை பிளவுப்படுத்துவது தொடர்பாக யார் பேசினாலும் அவர்கள் எந்தக் கட்சியாக இருந்தாலும் பொருத்துக் கொள்ள மாட்டோம். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நாம் ஒன்றுதான் என்று கூறியிருந்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 3வது நாள் கூட்டம் […]

Continue reading …

விஜய் அரசியல் பிரவேசம் குறித்து பேசும் ஜெயகுமார்!

Comments Off on விஜய் அரசியல் பிரவேசம் குறித்து பேசும் ஜெயகுமார்!

முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் நடிகர் விஜய் அரசியல் வருவது குறித்து, “அரசியல் என்பது பெருங்கடல்: விஜய் கரை சேர்கிறாரா, மூழ்கப் போகிறாரா?” என்று தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் சற்றுமுன் தனது அரசியல் கட்சி பெயரை வெளியிட்டார். அது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய்யின் அரசியல் கட்சி குறித்து பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வருங்காலத்தில் விஜய் மற்றும் உதயநிதி அல்லது விஜய் மற்றும் அண்ணாமலை என தமிழக அரசியல் இருக்கும் […]

Continue reading …

சிம்பிளாக கூட்டணி டீல் பேசும் தேமுதிக!?

Comments Off on சிம்பிளாக கூட்டணி டீல் பேசும் தேமுதிக!?

தேமுதிக நாடாளுமன்ற கூட்டணி பேச்சுவார்த்தைகள் குறித்த தெளிவாக திட்டமிட்டு செயல்பாட்டில் இறங்கி வருகிறது. மாநில, தேசிய கட்சிகள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்த தீவிரமான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. தமிழக அரசியல் சூழலை பொறுத்த வரை அதிமுக மற்றும் பாஜக கூட்டணி பிளவுப்பட்டதால் ஒரு மும்முனை போட்டி நிலவும் சூழல் உள்ளது. திமுகவிற்கு விசிக, இடதுசாரி கட்சிகளின் ஆதரவு உள்ள நிலையில், தங்களுடன் மற்ற சிறிய கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள அதிமுக, பாஜக […]

Continue reading …

#தமிழகவெற்றிகழகம் இந்தியளவில் டிரெண்டிங்!

Comments Off on #தமிழகவெற்றிகழகம் இந்தியளவில் டிரெண்டிங்!

இன்று நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற தனது அரசியல் கட்சியை அதிகாரபூர்வமாக அறிவித்தார். நீண்ட காலமாக நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பல்வேறு பரபரப்புகள், விவாதங்கள் நடந்து வந்த சூழலில் இன்று விஜய் அதிகாரப்பூர்வமாக தனது அரசியல் வருகையை அறிவித்தே விட்டார். தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கியுள்ளார் நடிகர் விஜய் 3 பக்கத்திற்கு நீளமான அறிக்கையை வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய். அதில் தனது நோக்கம் நாடாளுமன்ற தேர்தல் அல்ல […]

Continue reading …

விஜய்யின் கட்சி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு!

Comments Off on விஜய்யின் கட்சி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு!

நடிகர் விஜய் தனது அரசியல் கட்சி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு குறித்த அறிவிப்பை விஜய் இன்று வெளியிட்டுள்ளார். தமிழக வெற்றி கழகம் என்ற தனது அரசியல் கட்சி பெயரை அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பின் படி சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு முழுமையாக அடுத்த இரண்டு ஆண்டுகளில் தீவிரமாக அரசியலில் இறங்குவார் என்றும் கூறப்படுகிறது. கட்சி பெயரை அறிவித்ததை அடுத்து பிரம்மாண்டமான மாநாடு நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் கமிஷனரில் கட்சியின் பெயர் மற்றும் கொடியை பதிவு செய்த […]

Continue reading …

ஐஆர்சிடிசி இணையதளத்தில் பண மோசடி?

Comments Off on ஐஆர்சிடிசி இணையதளத்தில் பண மோசடி?

ஐஆர்சிடிசி ரயில் டிக்கெட் இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தவர் கணக்கிலிருந்து ரூ.1.8 லட்சம் திருடப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் பல ஆயிரக்கணக்கான ரயில்களில் பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி இணையதளத்தை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் சென்னை வடபழனியை சேர்ந்த ஸ்ரீதரன் என்பவர் ஐஆர்சிடிசி தளத்தில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார். பின்னர் அதை ரத்து செய்து ரீஃபண்ட் பெறுவதற்காக ஐஆர்சிடிசியின் இணையதளம் சென்றுள்ளார். அதில் உதவிக்கு என்று பதிவிடப்பட்டிருந்த […]

Continue reading …

கஞ்சா சாக்லெட் விற்ற வாலிபர் கைது!

Comments Off on கஞ்சா சாக்லெட் விற்ற வாலிபர் கைது!

ஒடிசாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் தாராபுரம் அருகே கஞ்சா சாக்லேட் விற்பனை செய்து போது மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குடிமங்கலம் அருகே உள்ள பொட்டியம்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லெட் விற்கப்படுவதாக, அப்பகுதி பொதுமக்கள், தாராபுரம் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மதுவிலக்கு காவல் நிலைய ஆய்வாளர் கோவர்த்தனாம்பிகை தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா சாக்லெட் விற்பனையில் ஈடுபட்ட ஒரிசா மாநிலத்தை சேர்ந்த ஜஜாபூர் […]

Continue reading …

நடுரோட்டில் தீப்பிடித்த கார்!

Comments Off on நடுரோட்டில் தீப்பிடித்த கார்!

சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எறிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காரில் இருந்தவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். கடலூர் மாவட்டம் பெண்ணடம் காமராஜர் தெருவை சேர்ந்த மணிகண்டன் மற்றும் காமராஜ் ஆகிய இருவரும் பணியின் காரணமாக சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலை நகர் பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ரயில்வே மேம்பாலத்தில் ஏறி சி.கொத்தங்குடி தோப்பு செல்லும் வழியில் திடீரென கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் பதறிப் போன மணிகண்டன் மற்றும் […]

Continue reading …

ஷங்கருக்கு எதிராக டுவீட் போடும் ராம்சரண் ரசிகர்கள்!

Comments Off on ஷங்கருக்கு எதிராக டுவீட் போடும் ராம்சரண் ரசிகர்கள்!

“கேம்சேஞ்சர்” திரைப்படத்தை ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் நடிப்பில் ஷங்கர் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார். இத்திரைப்படத்துக்காக கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதித் தந்துள்ளார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் பெருமளவுக்கு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்தாண்டு தொடங்கப்பட்ட படம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதற்குக் காரணம் இயக்குனர் ஷங்கர் “இந்தியன்” படத்தையும் அடுத்தடுத்து இயக்கி வருவதுதான். “இந்தியன் 2” இப்போது மூன்றாவது பாகமும் வர இருப்பதால் மேலும் அந்த படத்தின் ஷூட்டிங் நாட்கள் அதிகமாகியுள்ளன. இதனால் […]

Continue reading …