Home » Posts tagged with » Netrikkan (Page 134)

கத்தி முனையில் பட்டதாரி வாலிபர் கடத்தல்!

Comments Off on கத்தி முனையில் பட்டதாரி வாலிபர் கடத்தல்!

மர்ம நபர்கள் கத்தி முனையில் வாலிபர் ஒருவரை கடத்தி சென்ற சம்பவம் திருத்தணி அருகே உள்ள மக்களிடம் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுக்கா நத்தம் கிராமத்தில் முதுநிலை பட்டதாரி வாலிபர் வெங்கட முணி என்பவர் விவசாய வேலை செய்து வந்துள்ளார். திடீரென்று அந்த கிராமத்திற்கு சொகுசு காரில் பட்டாக்கத்திகளுடன் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல், வெங்கட முனியை கத்தி முனையில் கடத்தி சென்றனர். தடுக்கச் சென்ற அவரது உறவினர்கள், நண்பர்களை […]

Continue reading …

கரன்சி நோட்டுகளை மாற்றி தருவதாக மோசடி!

Comments Off on கரன்சி நோட்டுகளை மாற்றி தருவதாக மோசடி!

ஈரான் நாட்டை சேர்ந்தவர் வெளிநாட்டு கரன்சிகளை மாற்றுவதாக கூறி வெளிநாட்டு பணத்தை திருடியதாக தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 26ம் தேதி மதுரை மாநகர் நேதாஜிரோடு பகுதியில் உள்ள SRS Forex என்ற நிறுவனத்தில் வெளிநாட்டு கரன்சி மாற்றுவது போல் நடித்து அங்கிருந்து வெளிநாட்டு பணம் திருடி சென்றதாக மதுரை திடீர்நகர் காவல் நிலையத்திற்கு வந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சியின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். குற்றவாளியை தேடி […]

Continue reading …

அமர் பிரசாத் ரெட்டி தலைமறைவா?

Comments Off on அமர் பிரசாத் ரெட்டி தலைமறைவா?

பாஜக பிரமுகர் அமர் பிரசாத் ரெட்டி பெண்ணை தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இன்று அவரது முன் ஜாமின் மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அமர் பிரசாத் ரெட்டி, அவரது கார் ஓட்டுனர் மற்றும் பாஜக மகளிர் அணியை சேர்ந்த நிவேதா ஆகியோர் ஆண்டாள் என்ற பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரையும் அவரது சகோதரியையும் தாக்கியதாக காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அமர் பிரசாத் ரெட்டியை கைது செய்ய காவல்துறையினர் தீவிரமாக இருக்கும் நிலையில் […]

Continue reading …

தேர்தல் அதிகாரியின் அடையாள அட்டை காணவில்லை!

Comments Off on தேர்தல் அதிகாரியின் அடையாள அட்டை காணவில்லை!

தனது அடையாள அட்டையை காணவில்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கோட்டை போலீசாரிடம் புகாரளித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில், தேர்தல் அதிகாரிகள் தமிழகத்தில் மேற்கொண்டு வருகின்றனர். தன்னுடைய அடையாள அட்டையை காணவில்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு என போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகார் மனுவில், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை புதுப்பிக்கத் […]

Continue reading …

அரியலூர் சரணாலயத்திற்கு ராம்சார் சர்வதேச அங்கீகாரம்!

Comments Off on அரியலூர் சரணாலயத்திற்கு ராம்சார் சர்வதேச அங்கீகாரம்!

ராம்சார் சர்வதேச அங்கீகாரம் அரியலூர் மாவட்டத்திலுள்ள கரைவேட்டி பறவைகள் சரணாலயத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. ராம்சார் அங்கீகாரம் தமிழ்நாட்டில் மேலும் 2 சதுப்பு நிலங்களுக்கு கிடைத்துள்ளது. அதன்படி, நீலகிரியிலுள்ள லாங்வுட் சோலை மற்றும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயத்திற்கு ராம்சார் சர்வதேச அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ராம்சார் உடன்படிக்கையின் கீழ் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்களின் பட்டியலில் கரைவெட்டி சரணாலயம் உட்பட மேலும் 5 இந்திய இடங்களும் சேர்க்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் மட்டும் ராம்சார் அங்கீகாரம் பெற்ற […]

Continue reading …

விராட் கோலி சகோதரரின் பதிவு!

Comments Off on விராட் கோலி சகோதரரின் பதிவு!

இந்திய வீரர் விராட் கோலி இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகி உள்ளார். இத்தகவலை பிசிசிஐ உறுதி செய்துள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் விலகியதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் இரு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கோலி அதில் இடம்பெற்றிருந்தார். கோலி விலகியதற்குக் காரணம் அவரின் தாயார் சரோஜ் கோலியின் உடல்நலக் குறைவுதான் காரணம் என்று கூறப்படுகிறது. கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள அவர் தற்போது சிகிச்சை எடுத்துக் கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. […]

Continue reading …

சிஏஏ குறித்து முதலமைச்சர் உறுதி!

Comments Off on சிஏஏ குறித்து முதலமைச்சர் உறுதி!

சமீபத்தில், பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் ஒருவர் “மேற்கு வங்கம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் சிகிகி நடைமுறைப்படுத்தப்படும்” என்று கூறியிருந்தார். இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “உறுதியாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டினுள் சிஏஏ கால்வைக்க விடமாட்டோம்!’’ என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஏழு நாட்களில் மேற்கு வங்கம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் சிஏஏ நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒன்றிய இணையமைச்சர் ஒருவர். இலங்கைத் தமிழர்களுக்கும் இசுலாமியர்களுக்கும் எதிரான சிஏஏ சட்டம் ஆனதற்கு முழுமுதற்காரணமே நாடாளுமன்றத்தில் […]

Continue reading …

தேர்தலுக்கு பிறகு முழு பட்ஜெட்; பிரதமர் மோடி!

Comments Off on தேர்தலுக்கு பிறகு முழு பட்ஜெட்; பிரதமர் மோடி!

இன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தலைமையில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையில், “புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இது எனது முதல் உரை. ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற இலக்கை நோக்கிப் பயணிக்கிறோம். நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் வறுமையின் பிடியில் இருந்து 25 கோடி பேர் மீட்கப்பட்டுள்ளனர். எந்த ஒரு பயனாளியும் விட்டுவிடாமல் அரசின் பயங்கள் சென்றடைய வேண்டும் என்பதை எனது அரசின் இலக்கு ஆகும். […]

Continue reading …

எதிர்பார்ப்புகள் என்ன? பாமக மற்றும் தேமுதிகவிடம் கேட்கும் அதிமுக!

Comments Off on எதிர்பார்ப்புகள் என்ன? பாமக மற்றும் தேமுதிகவிடம் கேட்கும் அதிமுக!

பாமக மற்றும் தேமுதிகவிடம் மக்களவை தேர்தலையொட்டி அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவினர் கூட்டணி பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளனர். வருகிற ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான தேதி பிப்ரவரி கடைசி வாரம் அல்லது மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கூட்டணி பேச்சு வார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்ட தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சியுடன் திமுக ஏற்கனவே பேச்சுவார்த்தையை […]

Continue reading …

மல்யுத்த போட்டிக்கான உரிமையை பெற்ற நெட்பிளிக்ஸ்!

Comments Off on மல்யுத்த போட்டிக்கான உரிமையை பெற்ற நெட்பிளிக்ஸ்!

நெட்பிளிக்ஸ் நிறுவனம் உலகளவில் பிரபலமான மல்யுத்த போட்டிக்கான தொடரை ஒளிபரப்பும் உரிமையை ரூ.41,445 கோடிக்கு கைப்பற்றியுள்ளது. டபிள்யூ டபிள்யூ ஈ எனப்படும் குத்துச்சண்டை உலகம் முழுதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களால் பார்க்கப்படும் ஒரு விளையாட்டு ஆகும். இது மிகப்பெரிய அரங்கில், மில்லியன் டாலர் கணக்கில் முதலீடு செய்யப்பட்டு, டிரிப்பிள் எச், ரோமன் எம்பையர், ஜான் சீனா, பிராக் லெஸ்னர். பட்டீஸ்டா, ரை மிஸ்டீரியோ, பிக்ஷோ உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இவ்விளையாட்டில், ரா, ஸ்மேக் டவுன் […]

Continue reading …