
நாளுக்கு நாள் பாகிஸ்தானில் கடுங்குளிர் நிலவி வருகிறது. இந்த அதீத குளிரினால் 36 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவ்வாண்டின் குளிர்காலம் வழக்கத்தை விட அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆசியாவின் வடக்கு பிராந்தியங்களில் குளிர் வாட்டி வருகிறது. இந்தியாவில் தலைநகர் டில்லி தொடங்கி காஷ்மீர் வரை குளிர் வாட்டி வருகிறது. அண்டை நாடான பாகிஸ்தானிலும் குளிர் நிலை மோசமாக உள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் நிலவி வரும் மோசமான குளிரால் நிமோனியா பாதிப்பு ஏற்பட்டு 36 […]
Continue reading …
சமீபத்தில் கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார். தற்போது அவருடைய பெயரில் இருந்த டுவிட்டர் கணக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த கணக்கை தனது பெயருக்கு பிரேமலதா விஜயகாந்த் மாற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இச்செயல் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கேப்டன் விஜயகாந்த் பெயரில் இருந்த டுவிட்டர் கணக்கு தற்போது பிரேமலதா விஜயகாந்த் என்று மாற்றப்பட்டதோடு அதுமட்டுமின்றி தேமுதிகவின் பொதுச்செயலாளர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரேமலதாவின் இச்செயல் குறித்து தேமுதிக தொண்டர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். […]
Continue reading …
விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி துணை முதலமைச்சராக பதவியேற்க போகிறார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் அதற்கான பதிலை அவரே கூறியுள்ளார். உதயநிதி துணை முதலமைச்சராகப் போகிறார் என்ற செய்தி தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்படும் செய்தியாக மாறியிருக்கிறது. 2021ம் ஆண்டு தேர்தலுக்கு முன் திமுக இளைஞரணி செயலாளராக களம் இறங்கிய உதயநிதிக்கு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. சட்டமன்ற தேர்தலில் திமுக வென்றபோதே உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் […]
Continue reading …
நடிகர் அருண் விஜய் ஆக்ஷன் காட்சிகளை விரும்பும் ரசிகர்களுக்கு எப்போதும் பிடித்தமானவர். ஏனெனில், அவர் தனது படங்களில் வித்தியாசமான ஸ்டண்ட் காட்சிகள் மூலம் ரசிகர்களைக் கவரக்கூடியவர். அவரது நடிப்பில் ரிலீசாகவிருக்கும் திரைப்படமான “மிஷன் சாப்டர் 1” (அச்சம் என்பது இல்லையே)’ டிரெயிலர் அவரது ஆக்ஷன் திறமையை வெளிப்படுத்தியுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் விஜய் இயக்கிய இப்படம் ஜனவரி 12, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் குறித்து கூறும்போது “எனது முந்தைய […]
Continue reading …
சமீபத்தில் நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான “அன்னபூரணி” திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. ஆனால் இப்படம் ஓடிடியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. நடிகை நயன்தாராவின் 75வது படம் “அனனப்பூரணி.” இத்திரைப்படத்தில் ஹீரோவாக ஜெய் நடித்திருந்தார். இவர்களுடன் சத்யராஜ் மற்றும் ரெட்டின்ஸ் கிங்ஸ்லீ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க, நிலேஷ் கிருஷ்ணா என்ற அறிமுக இயக்குனர் படத்தை இயக்கியிருந்தார். தமன் இசையமப்பில் பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஜீ ஸ்டூடியோ நிறுவனம் தயாரிப்பில், நயன்தாரா நடிப்பில் உருவான “அன்னப்பூரணி” […]
Continue reading …
15வது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் சட்டவிரோதமான பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அவர் கடந்த ஆறு மாதங்களாக சிறையில் உள்ளார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. இன்றுடன் அவரது நீதிமன்ற காவல் முடிவடைந்ததை அடுத்து காணொளி மூலம் […]
Continue reading …
ஆளுநர் சேலம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர். ஆளுநர் ஆர்.என் ரவி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க வந்தார். துணை வேந்தர் ஜெகநாதனக்கு ஆளுநர் ஆதரவு தருவதை கண்டித்து சேலம் பெரியார் பல்கலைக்கழகம் முன்பு தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பினர் திரண்டனர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக ஆளுநரை கண்டித்தும் பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்தும் கண்டன […]
Continue reading …
தமிழ்நாடு அரசு பழைய தகரத்திற்கு பாலீஸ் போடும் வேலையை செய்கிறது என்று செல்லூர் ராஜூ குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு அரசு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மீது அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளது. அடுத்து இந்த அவதூறு வழக்கெல்லாம் எனக்கு ஜூஜூபி என்றும் பழைய தகரத்திற்கு பாலிஷ் போடும் வேலையை தான் தமிழ்நாடு அரசு செய்திருக்கிறது என்று பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் தமிழக அரசை […]
Continue reading …
கேரளம் மாநில சுகாதாரதுறை அமைச்சர் ஆயுஸ்மான் ஆயோக்யா மந்தி என்று இந்தியில் பெயர் மாற்றாததால் நிதி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார். கேரளம் மாநிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு, ஆயுஸ்மான் ஆயோக்யா மந்தி என்று பெயர் மாற்றாததால் மத்திய அரசு நிதியுதவி வழங்கவில்லை என கேரளம் மாநில சுகாதாரதுறை அமைச்சர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். தேசிய சுகாதார இயக்கம் (National Health Misson) திட்டத்தின் மருத்துவ மையங்களை ஆயுஸ்மான் […]
Continue reading …
நாளை டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. முன்கூட்டியே இன்று வெளியாகியுள்ளதை அடுத்து விண்ணப்பதாரர்கள் முடிவுகளை பார்த்து வருகின்றனர். டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பதவிகளில் 161 பணியிடங்கள் மற்றும் குரூப் 2ஏ பதவிகளில் சுமார் 6000 பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 2021ம் ஆண்டு வெளியானது. இதற்கான முதன்மை முதல் நிலை தேர்வுகள் முடிந்து, கடந்த ஆண்டு 25ம் தேதி முதனிலை தேர்வுகள் நடைபெற்றது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ […]
Continue reading …