Home » Posts tagged with » Netrikkan (Page 265)

பாம்பை சாப்பிட்ட 3 வயது சிறுவன்!

Comments Off on பாம்பை சாப்பிட்ட 3 வயது சிறுவன்!

விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பாம்பை மென்று சாப்பிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் பரூக்பாத் மாவட்டத்திலுள்ள மத்னாபூரில் வசிக்கும் தினேஷ்குமாரின் மகன் ஆயுஷ் (3 வயது). இவர் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருக்கும் போது, பாட்டியில் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, பெற்றோர் பதறியடித்துக் கொண்டு வீட்டின் முன் வந்து பார்த்தபோது, ஆயுஷ் தன் வாயில் எதையோ மென்று கொண்டிருந்தார். இதைப் பார்த்த பெற்றோர், அதை வாயில் இருந்து எடுத்தபோதுதான் அது பாம்பு என்று தெரிந்ததும் அதிர்ச்சியடைந்தனர். […]

Continue reading …

நாசாவில் தமிழர்கள் பணிபுரிய காரணம் கருணாநிதி; வைரமுத்து!

Comments Off on நாசாவில் தமிழர்கள் பணிபுரிய காரணம் கருணாநிதி; வைரமுத்து!

கவியரசு வைரமுத்து இன்று தமிழர்கள் நாசா, மைக்ரோசாஃப்டில் அதிகம் பணிபுரிவதற்கு காரணம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி என்று பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் உள்ள தனி£யர் கல்லூரி வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூறாவது பிறந்த நாள் கொண்டாடும் வகையில் திமுக சார்பில் கவியரங்கம் நடைபெற்றது. அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். இதில் கவியரசு வைரமுத்து பேசும்போது, “நாசா, மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களில் தமிழர்கள் அதிகம் பணிபுரிய […]

Continue reading …

உதயநிதியை விமர்சித்த ஜெயக்குமார்!

Comments Off on உதயநிதியை விமர்சித்த ஜெயக்குமார்!

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட சென்று வந்தார். இது குறித்து அவர் முதலமைச்சரிடம் விளக்கியதாக தகவல் வெளியானது. அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் உதயநிதி ஸ்டாலினின் ஒடிசா பயணத்தை சுற்றுலா சென்று வந்ததாக விமர்சனம் செய்துள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, “ஒரு துயர சம்பவத்திற்கு செல்லும் போது யாராவது கூலிங் கிளாஸ் போட்டு வருவார்களா? சூட்டிங் சென்ற மாதிரி அவர் ஒடிசாவுக்கு சென்று வந்துள்ளார். ஒடிசா சென்றவர்கள் சம்பவம் […]

Continue reading …

பிரபல நடிகையின் சமூக விழிப்புணர்வு!

Comments Off on பிரபல நடிகையின் சமூக விழிப்புணர்வு!

3 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டுள்ளார் பிரபல நடிகையான பூமி பட்னாகர். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலகச் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 50வது ஆண்டு சுற்றுச் சூழல் தினம் ஆகும். பிளாஸ்டிக் மாசுக் கட்டுப்பாட்டுக்குத் தீர்வு காண்பதற்கு அனைவரும் கவனம் செலுத்துவது இந்த ஆண்டிற்கான கருப்பொருளாக உள்ளது. எனவே பல சமூக ஆர்வலர்களும், சினிமா பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இன்று, பிரபல நடிகை பூமி பட்னாகர் 3 […]

Continue reading …

போராட்டத்திலிருந்து விலகவில்லை; சாக்ஷி மாலிக் விளக்கம்!

Comments Off on போராட்டத்திலிருந்து விலகவில்லை; சாக்ஷி மாலிக் விளக்கம்!

சாக்ஷி மாலிக் டில்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மல்யுத்த வீரர்கள் போராட்டத்திலிருந்து விலகுவதாக வந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். பிரிஜ்பூஷண் சரண்சிங் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர். இவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அவருக்கு எதிராக மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 23ம் தேதி முதல் டில்லியில் போராட்டம் நடத்தினர். சமீபத்தில் மல்யுத்த வீரர்கள் புதிய பாராளுமன்றத்தை நோக்கி செல்ல தொடங்கியதால் போலீசாரால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். இதில், பஜ்ரங் புனியா, சாக்சி […]

Continue reading …

மிஷ்கின் படத்தின் அப்டேட்!

Comments Off on மிஷ்கின் படத்தின் அப்டேட்!

இயக்குனர் மிஷ்கின் இப்போது “பிசாசு 2” படத்தை இயக்கி வருகிறார். மிஷ்கினின் படங்களில் எப்போதும் பின்னணி இசையும் பாடல்களும் பேசுபொருளாக இருக்கும். அது இளையராஜா இசையமைத்ததாக இருந்தாலும், அறிமுக இசையமைப்பாளராக இருந்தாலும் சரி. அந்த அளவுக்கு இசையில் ஈடுபாடு கொண்டவர் மிஷ்கின். அவர், தனது தம்பி அதித்யா இயக்கும் “டெவில்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். படத்தில் பூர்ணா, விதார்த் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். எழுத்தாளர் தேவிபாரதியின் கதையொன்றை தழுவி திரைக்கதை அமைத்துள்ளார் ஆதித்யா. படத்தின் ஷூட்டிங் முடிந்து […]

Continue reading …

ரயில் விபத்து குறித்து வைரமுத்து!

Comments Off on ரயில் விபத்து குறித்து வைரமுத்து!

ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து குறித்து கவிஞர் வைரமுத்து கவிதை ஒன்றை பதிவிட்டுள்ளார். நேற்றிரவு கொல்கத்தாவில் இருந்து சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் நிலையத்தை கடந்து கொண்டிருந்தது. பாஹநகர் பஜார் நிலையம் அருகே பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டுள்ளது. விபத்துக்குள்ளான இந்த ரயிலின் பெட்டிகள் அருகே இருந்த தண்டவாளத்தில் கவிழ்ந்தன. இதையடுத்து அருகில் இருந்த […]

Continue reading …

தமிழகத்தில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு!

Comments Off on தமிழகத்தில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு!

காலையில் அனைவரின் காதினிலும் விழுந்த மிகவும் சோகமான செய்தியே ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்து. இந்த கோர விபத்தில் சற்றுமுன் கிடைத்த தகவலின் படி ன்சுமார் 288 பேர் பலியாகினர். 900-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் மீட்புப்பணியினர் தொடர்ந்து துரிதமாக செய்யப்பட்டு வருகிறார். இந்நிலையில் ஒடிசா ரயில் விபத்து காரணமாக தமிழகத்தில் இன்று நடைபெற இருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கோரமண்டல் எக்ஸ்பிரஸ் இரயில் […]

Continue reading …

உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம்!

Comments Off on உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம்!

ஒடிசா மாநிலத்தில் நடந்த கோரமான ரயில் விபத்து மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடும், காயம் அடைந்த தமிழர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரண தொகை வழங்கப்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மத்திய அரசு சார்பில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

Continue reading …

ரயில் விபத்தால் 43 ரயில்கள் ரத்து!

Comments Off on ரயில் விபத்தால் 43 ரயில்கள் ரத்து!

ரயில் விபத்தின் காரணத்தால் 43 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், விபத்துக்குப் பிறகு 38 ரயில்கள் திருப்பி விடப்பட்டதாகவும் ரயில்வே துறை அறிவித்துள்ளது. நேற்று இரவு முதல் இன்று வரை தமிழகத்திலிருந்து 7 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காலை 7 மணிக்கு புறப்பட வேண்டிய கோரமண்டல் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் பயணிகள் கடும் அவதியில் இருப்பதாகவும் தெரிகிறது. மேலும் ரத்து செய்யப்பட்ட ரயிலில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு கட்டணம் முழுமையாக திருப்பி […]

Continue reading …