Home » Posts tagged with » Netrikkan (Page 298)

கோடை வெயில் பற்றி இந்திய வானிலை மையத்தின் தகவல்!

Comments Off on கோடை வெயில் பற்றி இந்திய வானிலை மையத்தின் தகவல்!

இந்திய வானிலை ஆய்வு மையம் இனிமேல் வெயில் தான், மழைக்கு வாய்ப்பில்லை என அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகம் முழுதும் கோடை வெயில் கொளுத்தி வந்தாலும் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 12 முதல் அதாவது இன்று முதல் ஏப்ரல் 15 வரை வறண்ட வானிலையே இருக்கும் என்றும் மழைக்கு வாய்ப்பில்லை என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை […]

Continue reading …

ஐபிஎல் போட்டி: நள்ளிரவு வரை மெட்ரோ ரயில் இயங்கும்!

Comments Off on ஐபிஎல் போட்டி: நள்ளிரவு வரை மெட்ரோ ரயில் இயங்கும்!

இன்று சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளதால் நள்ளிரவு 1 மணிவரை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஐபிஎல்-2023 &16வது சீசன் தற்போது நடைபெறுகிறது. இதில், மொத்தம் 10 அணிகள் இடம்பெற்று விளையாடி வருகின்றனர். இம்முறை யார் கோப்பையைக் கைப்பற்றுவது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் எழுந்துள்ளது. அனைத்து அணிகளும் சிறப்பாக விளையாடி வருகின்றன. இன்று சென்னை சேப்பாக்கத்தில், ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி […]

Continue reading …

ரஜினி படத்தை தயாரிக்க போட்டியோ போட்டி!

Comments Off on ரஜினி படத்தை தயாரிக்க போட்டியோ போட்டி!

லோகேஷ் கனகராஜ் இப்போது விஜய் நடிப்பில் “லியோ” திரைப்படத்தை இயக்கி வருகிறார். படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீருக்கு சில நாட்களுக்கு முன்னர் பயணம் செய்தது. அங்கு மோசமான வானிலை நிலவினாலும் படக்குழு அங்கேயே தங்கி இப்போது ஷூட்டிங்கை நடத்தி முடித்தனர். இப்போது சென்னையில் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. லோகேஷ், ரஜினி நடிக்கும் படத்தை இயக்கப் […]

Continue reading …

சென்னையிலிருந்து 500 சிறப்பு பேருந்துகள்!

Comments Off on சென்னையிலிருந்து 500 சிறப்பு பேருந்துகள்!

தமிழ் புத்தாண்டு சனி, ஞாயிறு என தொடர் விடுமுறை நாட்கள் வருவதால் தென் மாவட்ட மக்களின் வசதிக்காக 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. தமிழ் புத்தாண்டு வெள்ளிக்கிழமை வருவதாலும் அடுத்த சனி மற்றும் ஞாயிறு விடுமுறை என்பதாலும் சென்னையில் பணிபுரிந்து வரும் தென் மாவட்ட மக்கள் சொந்த ஊர் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். தமிழ் புத்தாண்டு மற்றும் ரம்ஜான் பண்டிகை […]

Continue reading …

காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணியா?

Comments Off on காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணியா?

இன்று டில்லியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் சோனியா காந்தியை சந்திக்க இருப்பதாகவும் பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைப்பது குறித்து அவர் ஆலோசனை செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரயிருப்பதையொட்டி, பாஜக கூட்டணிக்கு எதிராக ஒரு மெகா கூட்டணியை எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக திட்டமிட்டுள்ளனர். இவ்வாறான ஒரு முயற்சியில் ஈடுபட பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று டில்லி சென்றுள்ளார். அவர் சோனியா காந்தி உள்பட பல தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் […]

Continue reading …

அன்புமணி ராமதாஸின் கோரிக்கை!

Comments Off on அன்புமணி ராமதாஸின் கோரிக்கை!

அன்புமணி ராமதாஸ் 5 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பள்ளித் தாளாளரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் நகராட்சியில் 30வது வார்டு திமுக கவுன்சிலர் பக்கிரிசாமி அதே பகுதியில் தனியார் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். அப்பள்ளியின் தாளாளராக இருந்து வருகிறார். பக்கிரி சாமி தனது பள்ளியில் படித்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. இப்புகாரை அடுத்து காவல்துறையினர் திமுக […]

Continue reading …

ராகுல் காந்தி பேட்டி!

Comments Off on ராகுல் காந்தி பேட்டி!

முதலமைச்சர் நிதிஸ்குமாரை சந்தித்த பிறகு ராகுல் காந்தி “நாட்டிற்காக ஒற்றுமையாக போராடுவோம்” என்று பேட்டியளித்துள்ளார். 2024ம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில், இரண்டுமுறை தொடர்ந்து வெற்றி பெற்ற பாஜக கூட்டணிக்கு எதிராக ஒரு மெகா கூட்டணியை எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக திட்டமிட்டுள்ளனர். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று டில்லி சென்றிருந்தார். அவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்ட பல தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒரே கூட்டணியில் வலுவாக தேர்தலில் போட்டியிட […]

Continue reading …

இந்திய முஸ்லிம்கள் பற்றி நிர்மலா சீதாராமன் கருத்து!

Comments Off on இந்திய முஸ்லிம்கள் பற்றி நிர்மலா சீதாராமன் கருத்து!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாகிஸ்தான் முஸ்லிம்களை விட இந்திய முஸ்லிம்கள் நன்றாக உள்ளனர் என்று கூறியுள்ளார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அவர் சர்வதேச பொருளாதாரத்திற்கான பீட்டர்சன் மையத்தின் தலைவருடன் உரையாடினார். அப்போது அவர், “உலகின் இரண்டாவது பெரிய முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா. இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் வாழ்வில் எந்தவித கஷ்டமும் இல்லை. இஸ்லாமிய நாடு என்று பாகிஸ்தான் தன்னை அறிவித்துக் கொண்ட நிலையில் பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்களை விட […]

Continue reading …

சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி அறிவிப்பு!

Comments Off on சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி அறிவிப்பு!

சென்னை உயர்நீதிமன்றம் டிரோன்கள் உயர்நீதிமன்றத்தின் மீது பறக்கக் கூடாது என்றும் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிரடியாக அறிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் செயல்படும் பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டதோடு சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆகிய பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படங்கள் பொது நிகழ்ச்சிக்காக உயர் நீதிமன்றத்தை டிரோன் கேமராமூலம் படம் எடுத்ததாக புகாரளிக்கப்பட்டது. படம் எடுத்தவர்கள் காவல்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த […]

Continue reading …

நடிகை ராஷி கண்ணா கருத்து!

Comments Off on நடிகை ராஷி கண்ணா கருத்து!

தமிழில் பிஸியான நடிகைகளுள் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ராஷிகண்ணா. இவர் “இமைக்கா நொடிகள்” திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். ஜெயம் ரவியுடன் “அடங்கமறு” படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியாகி ஹிட்டான “சர்தார்” படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது விஜய் சேதுபதி மற்றும் ஷாகித் கபூர் ஆகியோருடன் இணைந்து பார்ஸி வெப் சீரிஸில் நடித்திருந்தார். சமூகவலைதளங்களில் தீவிரமாக இயங்கும் ராஷிகண்ணா தனது கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். அவ்வகையில் இப்போது ஸ்டைலிஷான உடை அணிந்து […]

Continue reading …