Home » Posts tagged with » Netrikkan (Page 300)

மருமகளை கொலை செய்த மாமனார்!

Comments Off on மருமகளை கொலை செய்த மாமனார்!

நெல்லையில் 50 வயதில் இரண்டாவது திருமணம் செய்ய தடையாக இருந்த மருமகளை மாமனார் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையை சேர்ந்த தங்கராஜின் மனைவி உயிரிழந்ததால் 50 வயதில் இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். இது குறித்து அவர் தனது மகன் தமிழரசனிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அப்போது எழுதிக் கொடுத்த வீட்டை திரும்ப தனது மகனிடம் கேட்டதாகவும் தெரிகிறது. இதையடுத்து மகன் மற்றும் மருமகள் வீட்டை திரும்ப தர மறுத்ததோடு 50 வயதில் […]

Continue reading …

செவிலியர் குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை!

Comments Off on செவிலியர் குழந்தைகளை கிணற்றில் வீசி கொலை!

செவிலியர் தன் குழந்தைகளை கிணற்றில் வீசிக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்ப்பென்னாத்தூரையடுத்த வற்றாபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னராசு. இவரது மனைவி சூர்யா (32). இவர் அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்ஸாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு லட்சன் (4), உதயன் (1) என்ற ஒரு மகன்கள். சின்னராசுக்கும், சூர்யாவுக்கும் இடையே கருத்துவேறு பாட்டால் தகராறு எழுந்துள்ளது. அந்த ஊரைச் சேர்ந்த […]

Continue reading …

தோனி தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தமிழ்ப் படம்!

Comments Off on தோனி தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தமிழ்ப் படம்!

கிரிக்கெட் வீரர் தோனி புதியதாக திரைப்பட நிறுவனத்தை தொடங்கி உள்ளார். அந்நிறுவனத்தின் பெயர் தோனி என்டர்டைன்மெண்ட் பிரைவேட் லிமிடெட். இந்நிறுவனத்தின் சார்பில் தோனியின் மனைவி சாக்சி தோனி தமிழ் படம் தயாரிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். அந்த படத்தின் டைட்டில் சற்று முன் அறிவிக்கப்பட்டது. “எல்ஜிஎம்” என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, யோகி பாபு உட்பட்டோர் நடிக்கவுள்ளனர். படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கி வருகிறார். இன்று இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாக […]

Continue reading …

முதலமைச்சர் ஆளுநரின் தீர்மானத்துக்கு முன்மொழி!

Comments Off on முதலமைச்சர் ஆளுநரின் தீர்மானத்துக்கு முன்மொழி!

இன்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ரவிக்கு எதிராக தீர்மானத்தை முன்மொழிய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆளுநர் ரவி கடந்த சில நாட்களாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவதாக ஆளும் கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக தமிழக அரசால் அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராதது குறித்தும் ஸ்டெர்லைட் போராட்டம் குறித்தும் அவர் கூறிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இன்று தமிழ்நாடு ஆளுநர் செயல்பாடுகள் தொடர்பாக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. […]

Continue reading …

விடுதலை 2 ஷூட்டிங் எப்போது?

Comments Off on விடுதலை 2 ஷூட்டிங் எப்போது?

வெற்றிமாறன் இயக்கிய “விடுதலை” திரைப்படம் மார்ச் 31ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகைச் சேர்ந்தவர்களும் கூட பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். ஆனால் பள்ளி தேர்வுகள் மற்றும் ஐபிஎல் போன்றவற்றால் படத்துக்கு எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் இல்லை என்று சொல்லப்படுகிறது. “விடுதலை” திரைப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான வேலைகள் விரைவில் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. மே மாதத்தில் மீதமுள்ள காட்சிகளை தொடர்ந்து 20 நாட்கள் படமாக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Continue reading …

“பையா 2” ஹீரோயின் இவர்தானா?

Comments Off on “பையா 2” ஹீரோயின் இவர்தானா?

கடந்த 2011ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் “பையா.” இத்திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது. இப்போது படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் உள்ளார் இயக்குனர் லிங்குசாமி. ஆனால் ஹீரோவாக கார்த்திக்கு பதில் ஆர்யா நடிக்கிறார். லிங்குசாமியே தயாரிக்கிறார். இத்திரைப்படத்தின் கதாநாயகியாக நடிக்கப் போவது யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. முதலில் ஜான்வி கபூரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஜான்வி கபூர் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் படத்தில் அறிமுகமாகிறார். அதனால் இப்போது […]

Continue reading …

வானிலை மையத்தின் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை!

Comments Off on வானிலை மையத்தின் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை!

இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த 5 நாட்களில் வெப்ப அலை தாக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு உள்பட இந்தியா முழுதும் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவி வருகிறது. இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பம் பதிவாகி வருகிறது. இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு இந்தியாவின் பல பகுதிகளில் வெப்ப அலை தாக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பல பகுதிகளில் […]

Continue reading …

மக்கள் நீதி மய்யம் கேள்வி!

Comments Off on மக்கள் நீதி மய்யம் கேள்வி!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் ஏ.ஜி.மவுரியா மக்களை பதற்றத்திலேயே வைத்துக் கொள்ள மத்திய அரசு முயல்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநில அரசு அனுப்பும் தீர்மானங்கள் நிலுவையில் இருக்கிறதென்றால், அவற்றுக்கு ஒப்புதல் வழங்கவில்லை என்று அர்த்தம் என ஆளுநர் பேசியிருப்பதை, சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. மத்திய அரசு, தனது பிரதிநிதி மூலமாக மாநில அரசின் இறையாண்மைக்கு அறைகூவல் விடுப்பதாகவே மக்கள் நீதி மய்யம் இதைப் பார்க்கிறது. பல்வேறு […]

Continue reading …

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்!

Comments Off on தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்!

தமிழக மீனவர்கள் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே, நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது புதுவை மீனவர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியர்குப்பம் மீனவர் குப்பத்தில் வசிக்கும் மீனவர்கள் சிலர் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். கடற்கரையிலிருந்து சுமார் 10கிமீ தூரத்தில் ஆழ்கடல் பகுதியில் காலை 6 மணிக்கு அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது, புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் விசைப்படகில் அப்பகுதிக்கு வந்தனர். அப்போது, தமிழக […]

Continue reading …

மத்திய அரசிடம் கொரோனா தடுப்பூசிக்காக கோரிக்கை!

Comments Off on மத்திய அரசிடம் கொரோனா தடுப்பூசிக்காக கோரிக்கை!

தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் 10 லட்சம் கொரோனா தடுப்பூசி வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் தினசரி 300-க்கும் அதிகமான பாதிப்புகளும் சென்னையில் மட்டும் 100க்கும் அதிகமான பாதிப்புகளும் ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த இதுவரை தடுப்பூசி போடாதவர்களுக்கு செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து 10 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்குமாறு மத்திய சுகாதாரத் துறைக்கு தமிழ்நாடு […]

Continue reading …