
நெடுஞ்சாலைத்துறை சென்னையில் ஒன்பது இடங்களில் மேம்பாலம் கட்ட திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இதற்காக ரூ.796 கோடி மதிப்பில் திட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நெடுஞ்சாலைதுறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது. அப்போது நெடுஞ்சாலை துறையின் கொள்கை விளக்க குறிப்பில் சென்னையில் ஒன்பது சந்திப்புகளில் மேம்பாலம் அமைக்க திட்டமிட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இத்திட்டங்களுக்காக ஒன்பது கோடி ரூபாய் செலவில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் நில எடுப்பு பணிகள் உள்பட மற்ற அனைத்து […]
Continue reading …
மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி சென்னை கலாஷேத்ரா கல்லூரி இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர் ஆகிய இருவரும் வரும் திங்கட்கிழமை 12 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் துன்பம் கொடுத்ததாக பேராசிரியர்கள் சிலர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து மாணவிகள் போராட்டம் நடத்தியுள்ள நிலையில் இது குறித்து விசாரணை செய்ய மகளிர் ஆணைய தலைவர் உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. பாலியல் […]
Continue reading …
20 ஆண்டுகள் சினிமாவில் நிறைவுசெய்துள்ளதை சுசீந்திரன் நன்றி தெரிவித்துள்ளார். இயக்குனர் சுசீந்திரன் “வெண்ணிலா கபடி குழு” திரைப்படம் மூலமாக அறிமுகமானார். அடுத்தடுத்து “நான் மகான் அல்ல,” “ஜீவா” மற்றும் “பாண்டிய நாடு” உட்பட ஹிட் படங்களைக் கொடுத்தார். ஆனால் அதன் பின்னர் அவர் இயக்கிய படங்கள் தோல்வியாகவே அமைந்தன. இப்போது சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் “வள்ளிமயில்” திரைப்படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார். படத்தில் சத்யராஜ் மற்றும் பாரதிராஜா உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். 1980ம் ஆண்டு […]
Continue reading …
போலந்து நாட்டில் தாயின் சடலத்தை 13 ஆண்டுகளாக மம்மி போல் வீட்டிலேயே பாதுகாத்து வைத்திருந்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இது குறித்து விசாரணை செய்தபோது தாய் மீது கொண்ட அன்பால் இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார். இருப்பினும் இறந்த உடலை 13 ஆண்டுகளாக வீட்டில் மம்மி போல் பாதுகாத்து வைத்தது சட்டப்படி குற்றம் என்று அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர். தாயின் மீது உள்ள அன்பு காரணமாக 13 ஆண்டுகளாக […]
Continue reading …
உயர்கல்வித்துறை சென்னை பல்கலைக்கழகத்திலுள்ள தொலைதூரக் கல்வி மூலம் டேட்டா சயின்ஸ் படிப்பு விரைவில் தொடங்கப்படும் என விளக்கமளித்துள்ளது. சென்னை பல்கலைக்கழகத் தொலைதூர கல்வி நிறுவனத்தில் இளங்கலை, முதுகலை, டிப்ளமா, சான்றிதழ் படிப்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் டேட்டா சயின்ஸ் தொலைதூர கல்வி மூலம் விரைவில் வழக்க சென்னை பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாக உயர் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது. அடுத்தாண்டு முதல் தொலைதூர கல்வி முறையில் பிஎஸ்சி டேட்டா சயின்ஸ், எம்பிஏ டேட்டா அனலிஸ்ட் ஆகிய புதிய […]
Continue reading …
கடந்த 9 நாட்களாக “70 ஆண்டு கால சரித்திர சாட்சியம் எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்ற தலைப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் புகைப்படக் கண்காட்சி மதுரை யாதவா ஆண்கள் கல்லூரி எதிரில் உள்ள மேனேந்தல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நிறைவு நாளான இன்று மக்கள் செல்வன் நடிகர் விஜய்சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பார்வையிட்டார். செய்தியாளர்களிடம் விஜய்சேதுபதி, “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 ஆண்டு கால புகைப்பட கண்காட்சியை பார்க்கும் போது நமது […]
Continue reading …
நோக்கியா நிறுவனம் நிலவில் 4ஜி மொபைல் நெட்வொர்க் பற்றிய மாஸ் திட்டத்தை செயல்படுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பூமியில் தான் தற்போது 4ஜி, 5ஜி என நெட்வொர்க் செயல்பட்டு வருகிறது. நிலவில் 4ஜி மொபைல் நெட்வொர்க் இவ்வாண்டு இறுதிக்குள் அமைக்க நோக்கியா நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் வருங்காலத்தில் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் இத்திட்டம் செயல்படுத்த உள்ளதாகவும் நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலவில் தகவல் தொடர்பினை மேம்படுத்த பரந்த அளவிலான நிலவின் கண்டுபிடிப்புகளை எளிதாக்க இந்த […]
Continue reading …
சென்னை மாவட்ட கலெக்டர் ஏப்ரல் 4ம் தேதி டாஸ்மாக் மற்றும் பார்கள் மூடப்படும் என்று தெரிவித்துள்ளார். ஏப்ரல் 4ம் தேதி மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அன்றைய தினம் சென்னை மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் சற்று முன் அறிவித்துள்ளார். அன்றைய தினம் விதிகளை முறையை மீறி மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு சென்னையில் டாஸ்மாக் கடைகள் மற்றும் […]
Continue reading …
தமிழ்நாட்டில் கொரோனாவின் 3ம் அலையின் போது, உருமாறிய ஓமைக்ரான் அதிமாக பரவியது. கடந்த சில வாரங்களாக ஒற்றை இலக்க எண்களில் மட்டுமே தொற்று இருந்தது. ஆனால் தற்போது படிப்படியாக உயர்ந்து 100ஐ தாண்டி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 608 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து மக்கள் பாதுகாப்பாக இருக்க […]
Continue reading …
சமீபத்தில் விஜய்யுடன் இணைந்து “வாரிசு” திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமான நடிகை ராஸ்மிகா மந்தனா சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா. அல்லு அர்ஜூனுடன் இணைந்து இவர் நடித்த “புஷ்பா 1” மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது “புஷ்பா -2” ஷூட்டிங் நடந்து வருகிறது. தமிழில், கார்த்தியுடன் இணைந்து “சுல்தான்,” விஜய்யுடன் இணைந்து “வாரிசு” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது, தெலுங்கு, இந்தி உள்ளிட்ட […]
Continue reading …