
ஏற்கனவே ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் சுங்க கட்டணம் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இன்று நள்ளிரவு 12 மணி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் சங்க கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வரும் நிலையில் நடப்பு நிதியாண்டில் சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 5 முதல் 10% வரை உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இதன்படி ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அதாவது இன்று நள்ளிரவு 12 […]
Continue reading …
பிரதமர் மோடி போப் பிரான்சிஸ் குணமடைய பிரார்த்திப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக வாடிகானில் வாழ்ந்து வரும் போப் பிரான்சிஸ் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குச் சுவாசிப்பதில் சிரமம் இருப்பதால், சுவாச தொற்றுநோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது உடல் நிலை சீராகி வருகிறது. இன்னும் சில நாட்கள் மருத்துவரின் அறிவுரையின்படி அவர் தொடர்ந்து சிகிச்சை பெறுவார் என்று வாடிகன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அடுத்தவாரம் நடைபெறும் புனித […]
Continue reading …
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பாஜகவை நாட்டின் எதிரி என்று கூற மாட்டேன் ஆனால் அதே நேரத்தில் பாஜக அகற்றப்பட வேண்டிய ஒரு ஆட்சி என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும்போது, “வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜாவுக்கு எதிராக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று சேர வேண்டும். எதிர் கட்சியின் கூட்டணிக்கு யார் தலைமை தாங்குகிறார்கள் என்பதை விட நாட்டை காப்பதற்கான போராட்டம் என்பதை எதிர்க்கட்சி தலைவர்கள் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். பாஜக நாட்டின் எதிரி […]
Continue reading …
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆளுநர் மாளிகையின் செலவு ஐம்பது லட்சமாக இருந்த நிலையில் அதிமுக ஆட்சியில் அது 5 கோடியாக மாறி உள்ளது என்று சட்டமன்றத்தில் கூறியுள்ளார். ஆளுநர் மாளிகைக்கு 2018 -19ம் ஆண்டில் 50 லட்சம் ரூபாயிலிருந்து 5 கோடியாக செலவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட அந்த தொகையை ஆய்வு செய்தால் ரூபாய் ஐந்து கோடியில் நான்கு கோடியை அட்சயபாத்திரம் அமைப்பில் இருந்த பணத்தை கொடுத்துள்ளனர். மீதமுள்ள ஒரு கோடி ஆளுநர் மாளிகையில் கண்ணுக்கு தெரியாத கணக்குகளுக்கு […]
Continue reading …
எடப்பாடி பழனிசாமி அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தொடர்கிறது என்று தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச் செயலாளர் குறித்த வழக்கில் தீர்ப்பு அவருக்கு சாதகமாக முடிந்தது. இதையடுத்து இடைக்கால பொதுச் செயலாளர் பதவியிலிருந்த எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் பதவி ஏற்றுக் கொண்டார். இதனால், அவரது அணியைச் சேர்ந்த அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இன்று, சென்னை தலைமைச் செயலகத்தில் எதிக்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம், “தமிழகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு […]
Continue reading …
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் ராஜினாமா செய்வேன் என்று கூறினார். இதற்கு நடிகை காயத்ரி ரகுராம் தற்போது அண்ணாமலை ராஜினாமா செய்வாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் தனது பதவியை ராஜினாமா செய்வேன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேட்டியளித்தார். நேற்று அமித்ஷா அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் அதிமுகவுடன் கூட்டணி தொடர்கிறது என்று கூறினார். மேலும் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்த போதும் பாஜக […]
Continue reading …
நீரவ் மோடி ராகுல் காந்திக்கு எதிராக இங்கிலாந்து நாட்டில் வழக்கு போட போகிறேன் என்று ஆவேசமாக பேசியுள்ளார். ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டு ஒரு கூட்டத்தில் பேசியபோது மோடி என்ற பெயர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவருக்கு நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறை தண்டனை கொடுத்துள்ளது. இத்தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேல் முறையீடு செய்துள்ளார். பொருளாதார குற்றம் செய்துவிட்டு இங்கிலாந்து நாட்டிற்கு சென்ற நீரவ்மோடி, […]
Continue reading …புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகுவது மட்டுமல்லாமல் ஓடிடியிலும் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் நான்கு தமிழ் திரைப்படங்கள் உட்பட பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளன. ஜீ 5ல், ஜெயம் ரவி நடித்த “அகிலன்” திரைப்படமும், சசிகுமார் நடித்த “அயோத்தி” வெளியாகிறது. நெட்பிளிக்ஸில் ‘அமிகோஸ்’ தெலுங்கு திரைப்படமும், ஷிலீமீலீக்ஷ்ணீபீணீ இந்தி திரைப்படமும், மர்டர் மிஸ்டரி 2’ ஆங்கில திரைப்படமும், காப்பிகேட் கில்லர்’ வெப்தொடரும் வெளியாகிறது. பிரபுதேவா நடித்த பாஹீரா சன் நெக்ஸ்ட்டில் வெளியாகிறது. அமேசான் […]
Continue reading …
நடிகை மனீஷா கொய்ராலா “பாபா” திரைப்பபடம் பாக்ஸ் ஆபிசில் தோல்வியடைந்த பின் தனக்கான பட வாய்ப்புகள் குறைந்ததாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தமிழ் மற்றும் இந்தி சினிமாவில் 90களில் முன்னணியாக இருந்தவர் மனீஷா கொய்ராலா. இவர், ஷங்கர் இயக்கத்தில், கமலுக்கு ஜோடியாக நடித்த “இந்தியன் -1” திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. கமலுடன் இணைந்து “ஆளவந்தான்,” ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூனுக்கு ஜோடியாக “முதல்வன்,” மணிரத்னம் இயக்கத்தில் “பம்பாய்,” சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து “பாபா” உட்பட பல படங்களில் நடித்தார். […]
Continue reading …
பெண் மருத்துவர் ஒருவர் ரஷ்யா இராணுவத்தில் பாலியல் அடிமைகள் இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்ய ராணுவத்தில் மருத்துவராக பணியாற்றிய பெண் மார்கரிட்டா ஐரோப்பிய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் பெண்கள் ராணுவ வீரர்கள் மனைவிகளாக பயன்படுத்தி வருகின்றனர். உயர் பதவியில் வகிக்கும் பெண்கள் முதல் சமையல், தூய்மை வேலை செய்யும் பெண்கள் வரை பாலியல் கொடுமை நடைபெற்று வருகிறது. இதை எதிர்க்கும் பெண்களுக்கு கடுமையான தண்டனைகள் […]
Continue reading …