Home » Posts tagged with » Netrikkan (Page 310)

எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!

Comments Off on எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!

கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தொடர் முழுவதுமே எதிர்கட்சி எம்பிக்களின் அமளி காரணமாக அவ்வப்போது ஒத்திவைக்கப்பட்டு வந்தது. லண்டன் நகரில் ராகுல் காந்தி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளும் பாஜக எம்பிகளும், அதானி குழும நிறுவனங்கள் குறித்து விசாரணை செய்ய குழு அமைக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளி காரணமாக தினந்தோறும் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டு வந்தன. […]

Continue reading …

கமல்- வினோத் இணையும் திரைப்படம்!

Comments Off on கமல்- வினோத் இணையும் திரைப்படம்!

சமீபத்தில் ஹெச் வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்த துணிவு திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்துக்குப் பிறகு அவர் கமல்ஹாசன் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதுமட்டுமில்லாமல் தனுஷ் நடிப்பிலும் ஒரு படத்தையும் இயக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். கமல் “இந்தியன் 2” திரைப்படத்தை முடித்ததும் அடுத்து உடனடியாக வினோத் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் நிலையில் மிகக்குறைந்த பட்ஜெட்டில் இந்த படத்தை உருவாக்குவதாக சொல்லப்படுகிறது. […]

Continue reading …

“பிச்சைக்காரன் 2” ரிலீஸ் எப்போது?

Comments Off on “பிச்சைக்காரன் 2” ரிலீஸ் எப்போது?

“பிச்சைக்காரன்” திரைப்படம் விஜய் ஆண்டனி நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பே நிறைவடைந்தது.இதையடுத்து படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் செய்தியை விஜய் ஆண்டனி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். “பிச்சைக்காரன் 2” திரைப்படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு விருந்தாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது படம் மே 12ம் தேதிக்கு தள்ளிவக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இதுபற்றி […]

Continue reading …

ரயிலை தாக்கினால் 5 ஆண்டு சிறைத்தண்டனை!

Comments Off on ரயிலை தாக்கினால் 5 ஆண்டு சிறைத்தண்டனை!

வந்தே பாரத் இந்திய நகரங்களுக்கு இடையே செல்லும் அதிவிரைவு ரயில்கள் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் சென்னை ஐசிஎஃபி-ல் தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி இந்த வந்தே பாரத் விரைவு ரயில் (டில்லியிலிருந்து வாரணாசி வரையிலான) சோதனை ஓட்டத்தை பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். இந்த வந்தே பாரத் ரயில்கள் மீது பயணிகள் கல்வீசித் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகின்றன. வந்தே பாரத் ரயில்கள் மீது கற்கள் வீசித் […]

Continue reading …

வெற்றிமாறன் படத்திற்கு பிரபலத்தின் டுவிட்!

Comments Off on வெற்றிமாறன் படத்திற்கு பிரபலத்தின் டுவிட்!

நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள “விடுதலை” திரைப்படத்தை பார்த்த பிரபலம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரெயிலர் சமீபத்தில் வெளியானது. இத்திரைப்படம் மார்ச் 31ம் தேதி உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர். இதையடுத்து, படத்திற்கு சென்சார் குழுவினர் ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். சினிமாவின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவன நிர்வாகி செண்பகமூர்த்தி பார்த்துவிட்டு, தனது டுவிட்டர் பக்கத்தில், “வெற்றிமாறனின் “விடுதலை” […]

Continue reading …

கர்நாடகாவில் ஆட்சியை பிடிப்பது யார்?

Comments Off on கர்நாடகாவில் ஆட்சியை பிடிப்பது யார்?

மே 10ம் தேதி கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெறும். மே 13ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் என்று இன்று காலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி உள்ளன. கர்நாடக மாநிலத்தில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டதில் எந்த கட்சி ஆட்சிக்கு வரும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய ஆளும் கட்சியான பாஜகவை 33 சதவீதம் பேர் பிடிக்கவில்லை என வாக்களித்துள்ளனர். அதேபோல் காங்கிரஸ் கட்சியையும் 30 சதவீதம் […]

Continue reading …

கார்த்திக் சிதம்பரத்தை நிராகரித்த ராகுல் காந்தி!

Comments Off on கார்த்திக் சிதம்பரத்தை நிராகரித்த ராகுல் காந்தி!

ராகுல் காந்தியை எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவர் இன்று பாராளுமன்றத்திற்கு வந்தபோது காங்கிரஸ் பிரமுகர்கள் பலரும் அவரது கையை குலுக்கி வரவேற்று பேசினர். எதிரே வந்த கார்த்திக் சிதம்பரம் ராகுல் காந்தியின் கையை கொடுக்க கையை நீட்டிய போது ராகுல் காந்தி அவரை கண்டுகொள்ளாமல் சென்றார். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கார்த்திக் சிதம்பரம் மற்றும் ப சிதம்பரம் ஆகியவர்கள் மீது ராகுல் காந்தி அதிருப்தியில் இருப்பதையே இது காட்டுகிறது என்று கூறப்படுவதால் […]

Continue reading …

“மக்களின் உணர்வுகளை மதியுங்கள்!’’; முதலமைச்சரின் டுவீட்!

Comments Off on “மக்களின் உணர்வுகளை மதியுங்கள்!’’; முதலமைச்சரின் டுவீட்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயிர் பாக்கெட்டில் இந்தி மொழி இடம்பெற வேண்டுமென்று மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில், “மக்களின் உணர்வுகளை மதியுங்கள்” என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தி திணிப்புக்கு தமிழ்நாட்டில் திமுக மற்றும் திராவிட இயக்கங்கள் கடுமையாக எதிர்ப்புகளும், கண்டனங்களும் தெரிவித்து வருகின்றன. தமிழகத்தில், தயிர்பாக்கெட்டுகளில் தஹி (தயிர்), கர்நாடகத்தில் தஹி (மோசரு) என்று மாநில மொழிகளை அடைப்புக்குள் கொண்டு வரவேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளது. இதனால் மீண்டும் மத்திய அரசு இந்தி திணிப்பை தொடங்கியுள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. முதலமைச்சர் […]

Continue reading …

கேப்டன் மில்லர் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது?

Comments Off on கேப்டன் மில்லர் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது?

கடந்தாண்டு இறுதியில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவான “ராக்கி” நல்ல விமர்சனங்களையே பெற்றது. இதையடுத்து அவர் செல்வராகவனை வைத்து இயக்கிய திரைப்படமும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அவர் தனது மூன்றாவது படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்போது முக்கியமானக் காட்சிகளை தென்காசி அருகே படக்குழு படமாக்கி வருகிறது. இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. விறுவிறுப்பாக இப்போது ஷூட்டிங் […]

Continue reading …

பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழா அப்டேட்!

Comments Off on பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழா அப்டேட்!

ஏப்ரல் 28ம் தேதி “பொன்னியின் செல்வன் 2” திரைப்படம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முதல் பாகம் சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. முதல் பாகத்தின் வெற்றியால் இரண்டாம் பாகத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இப்போது படத்தின் கிராபிக்ஸ் பணிகள் நடந்துவரும் நிலையில் […]

Continue reading …