Home » Posts tagged with » Netrikkan (Page 352)

சாலையோர வியாபாரி கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பா?

Comments Off on சாலையோர வியாபாரி கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பா?

சாலையோர துணி வியாபாரி ஒருவர் ரூ.366 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த சாலையோர துணிக்கடை வியாபாரி அகமது என்பவர் தினமும் 500 ரூபாய் மட்டுமே சம்பாதித்து வந்துள்ளார். அவருக்கு ஜிஎஸ்டி அலுவலகத்திலிருந்து ரூபாய் 366 கோடியை வரி ஏய்ப்பு செய்ததாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்த விசாரணையில் அவர் இரண்டு வருடங்களுக்கு முன்பே தன்னுடைய வியாபாரத்தை நிறுத்திவிட்டதாகவும் அவரது ஜிஎஸ்டி எண்ணை மர்ம நபர்கள் சிலர் […]

Continue reading …

மார்பக புற்றுநோயின் மருந்து விலைக்குறைப்பு!

Comments Off on மார்பக புற்றுநோயின் மருந்து விலைக்குறைப்பு!

புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்தின் விலைகளை குறைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்து வந்தநிலையில் மார்பக புற்றுநோய் மருந்து ரூ.80,000லிருந்து ரூ.3800ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மார்பகப் புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்தின் விலை குறைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை மார்பக புற்றுநோய் சிகிச்சைக்காக ஒவ்வொரு மாதமும் 80 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அது 3800 […]

Continue reading …

விக்னேஷ் சிவனுக்காக செவி சாய்க்காத தயாரிப்பு நிறுவனம்!

Comments Off on விக்னேஷ் சிவனுக்காக செவி சாய்க்காத தயாரிப்பு நிறுவனம்!

பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா அஜீத் 62 திரைப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகியுள்ளது உறுதியாகியுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. அஜீத்தின் 62வது திரைப்படத்தை சில மாதங்களுக்கு முன்னர் வெளியான அப்டேட்டின்படி லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இப்படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது இறுதிகட்டத்தில் படத்தின் கதையில் அஜீத் மற்றும் லைகா ஆகிய இரு தரப்புக்குமே திருப்தி இல்லாததால் விக்னேஷ் சிவனை இத்திரைப்படத்திலிருந்து […]

Continue reading …

சூப்பர் ஸ்டார் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Comments Off on சூப்பர் ஸ்டார் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள “ஜெயிலர்” திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் “ஜெயிலர்” திரைப்படத்தில் ரஜினியோடு தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களை கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் சிவகுமார், மலையாளத்தில் இருந்து மோகன்லால், தெலுங்கில் இருந்து சுனில் என ஒவ்வொரு மொழியில் இருந்தும் ஏராளமான நடிகர்கள் நடிக்கிறார்கள். இப்படம் ஏப்ரல் மாதம் ரிலீசாகும் […]

Continue reading …

பள்ளி மாணவி மாரடைப்பால் உயிரிழப்பு!

Comments Off on பள்ளி மாணவி மாரடைப்பால் உயிரிழப்பு!

பள்ளி மாணவி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உஷா நகர் பகுதியைச் சேர்ந்த மாணவி விரிந்தா திரிபாதி(16). அங்குள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த புதன் கிழமை அன்று வழக்கம் போல் அவர் பள்ளிக்குச் சென்றார். குடியரசுத் தினவிழாவுக்கு ஒத்திகை நடந்த நிலையில், ஒத்திகை முடிந்தபின் அவர் வகுப்பிற்குச் சென்றார். வகுப்பிற்குச் சென்றதும் அவர் மயங்கி விழுந்தார். […]

Continue reading …

மத்திய அமைச்சரின் சகோதரர் மரணம்!

Comments Off on மத்திய அமைச்சரின் சகோதரர் மரணம்!

நிதிஸ்குமார் தலைமையில் பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சவுபேவின் சகோதரர் நியமல் சவுபே மாரடைப்பால் உயிரிழந்ததை அடுத்து, 2 அரசு மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பீகார் மாநிலம் பகல்பூரில் வசித்து வரும் நிர்மல் சவுபேவுக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டதால், அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், மருத்துவர்கள் இல்லாததால் உயிரிழந்தார். எனவே, மருத்துவர்கள் அலட்சியத்தால் அவர் […]

Continue reading …

வானிலை மையத்தின் தகவல்!

Comments Off on வானிலை மையத்தின் தகவல்!

வானிலை மையம் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவித்துள்ளது. நாளை வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழைபெய்ய வாய்ப்பிருப்பதாக வானிமை மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்குப் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு நிலவுவதால், அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்குத் திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வாக வலுவடையும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. […]

Continue reading …

“பதான்” படத்தின் வசூல் ரூ.220 கோடி!

Comments Off on “பதான்” படத்தின் வசூல் ரூ.220 கோடி!

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான், ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் “பதான்.” யஷ்ராஜ் பிலிம்ஸ் இப்படத்தை வெளியிட்டுள்ளது. கடந்தாண்டு வெளியான பாலிவுட் படங்கள் வெற்றிபெறாத நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பின், ஷாருக்கானின் பதான் படம் ஒட்டுமொத்த பாலிவுட்டிற்கும் நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன் தினம் இப்படம் ரிலீஸான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூலையும் வாரிக் குவித்துள்ளது. ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்துள்ள […]

Continue reading …

பரந்தூர் விமான நிலையம் குறித்து மத்திய அமைச்சர் பேட்டி!

Comments Off on பரந்தூர் விமான நிலையம் குறித்து மத்திய அமைச்சர் பேட்டி!

மத்திய விமான போக்குவரத்துத்துறை இணையமைச்சர் விகே சிங் பரந்தூர் விமான நிலையம் அமைக்க இருக்கும் இடத்தை தேர்வு செய்தது தமிழக அரசுதான் என்றும் மத்திய அரசு அல்ல என்றும் தெரிவித்துள்ளார். பரந்தூரில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட இருக்கும் நிலையில் அந்த பகுதி விவசாயிகள் விமான நிலையம் அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பரந்தூரில் விமான நிலையம் அமைக்க இடத்தை தேர்வு செய்தது தமிழ்நாடு அரசுதான் என்றும் மத்திய அரசு அல்ல என்றும் நெல்லையில் […]

Continue reading …

நல்லகண்ணு உடலநலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

Comments Off on நல்லகண்ணு உடலநலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நலம் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. சமீபத்தில் நல்லகண்ணு தனது 97வது பிறந்தநாளை கொண்டாடினார். வயோதிகம் மற்றும் சில உடல் நலப் பிரச்சினை காரணமாக அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் நல்லகண்ணு. அவருக்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் கிருமி தொற்றால் அவர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் நுரையீரல் தொற்றும் அவருக்கு உள்ளதாகவும் தெரிகிறது. இதையடுத்து […]

Continue reading …