Home » Posts tagged with » Netrikkan (Page 374)

சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

Comments Off on சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

தமிழ்நாடு அரசின் சொத்து வரி உயர்வு குறித்த அரசாணையை பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சமீபத்தில் சென்னை கோவை நகராட்சிகளில் சொத்துவரி அதிகமாக உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. சென்னை கோவை மாநகராட்சி சொத்து வரி உயர்வை எதிர்த்து நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. தற்போது வந்த தகவலின் படி சொத்து வரி உயர்வை எதிர்த்து தொடரப்பட்ட […]

Continue reading …

“வாரிசு” படத்தின் ரன்னிங் டைம்?

Comments Off on “வாரிசு” படத்தின் ரன்னிங் டைம்?

வம்சி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி உள்ள “வாரிசு” திரைப்படம் ஜனவரி 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் “வாரிசு” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவை காண விஜய் ரசிகர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. கிட்டத்தட்ட 5000 ரசிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் விழாவில் கலந்து கொண்டு ரசித்தனர். இதையடுத்து படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன. படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தற்போது […]

Continue reading …

பிரபல நடிகை மீது வழக்கு!

Comments Off on பிரபல நடிகை மீது வழக்கு!

“காதலில் சொதப்புவது எப்படி”, “வாயை மூடி பேசவும்” போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த்தவர் இயக்குனர் பாலாஜி மோகன். இவர் குறும்படங்கள் மூலமாக தமிழ் சினிமாவுக்கு வந்த இயக்குனர்களில் ஒருவர். அதன் பின்னர் பாலாஜி மோகன், தனுஷ் கூட்டணியில் உருவாகிய “மாரி” மற்றும் “மாரி 2” ஆகிய இரண்டு படங்களுமே பெரியளவில் வெற்றி பெறவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்த பாலாஜி மோகன், நடிகை தன்யா பாலகிருஷ்ணனை திருமணம் செய்துகொண்டதாக […]

Continue reading …

அஜீத்தின் பட டிரெயிலர் பற்றிய தகவல்!

Comments Off on அஜீத்தின் பட டிரெயிலர் பற்றிய தகவல்!

நடிகர் அஜீத் நடிப்பில் உருவாகியுள்ள “துணிவு” திரைப்படத்தின் டிரெயிலர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. போனி கபூர் தயாரிப்பில்,- ஹெச்.வினோத்- இயக்கத்தில், நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “துணிவு.” அஜீத்துடன் இணைந்து மஞ்சு வாரியர் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். படத்தின் “சில்லா சில்லா,” “காசேதான் கடவுளடா” ஆகிய இரண்டு சிங்கில்களை தொடர்ந்து 3வது “சிங்கில் கேங்ஸ்டர்” பாடல் நேற்று வெளியாகி வைரலாகி வருகிறது. துபாயில், பாம்ஸ் தீவிற்கு மேல் ஸ்கை டைவர்ஸ்ட் அந்தரத்தில் பரந்து “துணிவு” திரைப்பட […]

Continue reading …

அச்சுறுத்தும் சிறுத்தைப் புலி!

Comments Off on அச்சுறுத்தும் சிறுத்தைப் புலி!

அசாம் மாநிலத்தில் சிறுத்தை புலியின் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அசாமின் ஜோர்ஹத் மாவட்டத்தில் உள்ள தியோக் பகுதியில் செனிஜானில் மழைக்காடு ஆய்வு மையம் செயல்படுகிறது. இப்பகுதியில் சுற்றித் திரிந்து வரும் ஒரு சிறுத்தைப் புலி, அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இச்சிறுத்தைப் புலி குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன் லால் மீனா செய்தியாளர்களிடம் கூறும்போது, “3 வனத்துறை உள்ளிட்ட 13 பேரை இச்சிறுத்தைப் புலி தாக்கியுள்ளது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை […]

Continue reading …

கர்நாடகாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு!

Comments Off on கர்நாடகாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு!

கடந்த 2019ம் ஆண்டு சீனாவிலிருந்து உலக நாடுகளுக்கு கொரொனா தொற்றுநோய் பரவியது. இவ்வாண்டு ஓரளவு கொரொனா தாக்கம் குறைந்தது. ஆனால், தற்போது, மீண்டும் சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் பரவி வருகிறது. கர்நாடக மாநிலத்தில் முதலமைச்சர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு இவ்வாண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. சீனாவில் உருமாறிய கொரோனா வைரஸான பிஎப்-7 ஒமைக்கான் பரவலால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அண்டை நாடான இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், மத்திய […]

Continue reading …

மலையாள சூப்பர் ஸ்டாரின் பட டைட்டில் அறிவிப்பு!

Comments Off on மலையாள சூப்பர் ஸ்டாரின் பட டைட்டில் அறிவிப்பு!

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் நடிப்பில், அடுத்து உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது. நடிகர் மோகன்லால் தனது சமூக வலைதளத்தில் தனது திரைப்படத்தின் ‘மலைக்கோட்டை வாலிபன்’ என்று பெயரிடப்பட்ட வெளியிட்டுள்ளார். இது வைரலாகி உள்ளது. இப்படத்திற்கு பிஎஸ். ரபீகியூ எழுத்தாளராகவும், பிரசாந்த் பிள்ளை இசையமைப்பாளராகவும், மது நீலகண்டன் நடன இயக்குனராகவும், “காந்தாரா” திரைப்பட புகழ் விக்ரம் சண்டைப் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளனர். இப்படத்தை லியோ ஜோஸ் பள்ளிச்சரி இப்படத்தை இயக்கவுள்ளார்.

Continue reading …

“ராங்கி” திரைப்படத்தின் டிரெயிலர்!

Comments Off on “ராங்கி” திரைப்படத்தின் டிரெயிலர்!

நடிகை திரிஷா “பொம்பளைய கதற வைக்க ஆம்பளையா இருந்தா மட்டும் பத்தாது” என்று பேசும் வசனத்துடன் கூடிய டிரெயிலர் தற்போது வெளியாகி உள்ளது. லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள “ராங்கி” திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி கடந்த சில ஆண்டுகளாக நிலையில் தற்போது தான் அந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 30ம் தேதி இப்படம் திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சற்று முன் இத்திரைப்படத்தின் டிரெயிலர் வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லரில் திரிஷாவின் அதிரடி காட்சிகள் […]

Continue reading …

தமிழ்க்குடிமகன் டிரெயிலர்!

Comments Off on தமிழ்க்குடிமகன் டிரெயிலர்!

இயக்குனரும் நடிகருமான சேரனின் நடிப்பில் “தமிழ் குடிமகன்” திரைப்படத்தின் டிரெயிலர் வெளியாகி உள்ளன. இசக்கி கார்வண்ணன் என்பவரது இயக்கத்தில், பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “தமிழ்குடிமகன்.” சேரன் மற்றும் ஸ்ரீபிரியங்கா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் கீழ் சாதியினருக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்த கதையம்சம் கொண்டது என்பது டிரையிலரிலிருந்து தெரியவருகிறது. சேரனின் வழக்கமான இயல்பான நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் நிச்சயம் ரசிகர்கள் மனதை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் ரிலீஸ் தேதியை […]

Continue reading …

நெட்பிளிக்ஸ் குறித்து இங்கிலாந்து அரசு எச்சரிக்கை!

Comments Off on நெட்பிளிக்ஸ் குறித்து இங்கிலாந்து அரசு எச்சரிக்கை!

இங்கிலாந்து அரசு நெட்ப்ளிக்ஸ் பாஸ்வேர்டை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கு பகிர்ந்தால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறை தண்டனை அளிக்க வாய்ப்பிருப்பதாகவும் எச்சரித்துள்ளது. உலகம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திற்கு மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர். நெட்பிளிக்ஸ் வாடிக்கையாளர்கள் தங்களுடைய பாஸ்வேர்டை உறவினர்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு 100 மில்லியன் டாலருக்கும் மேலாக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். நெட்பிளிக்ஸ் நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் பாஸ்வேர்டை பகிர்ந்தால் அவர்கள் மீது கிரிமினல் […]

Continue reading …