Home » Posts tagged with » Netrikkan (Page 387)

படுதோல்வியடைந்த பிரபல நடிகரின் திரைப்படம்!

Comments Off on படுதோல்வியடைந்த பிரபல நடிகரின் திரைப்படம்!

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் “டிஎஸ்பி” படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. படத்தில் “சேதுபதி” மற்றும் “செக்க சிவந்த வானம்“ ஆகிய திரைப்படங்களுக்குப் பின்னர் விஜய் சேதுபதி மீண்டும் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்திருக்கிறார். கார்த்திக் சுப்பராஜ் தன்னுடைய ஸ்டோன்பென்ச் நிறுவனம் மூலம் தயாரித்துள்ள இந்த படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. கடந்த வாரம் வெளியான முதல்நாளில் இருந்து இந்த படம் படுமோசமான வசூலைப் பெற்று வருகிறது. தொடர்ந்து […]

Continue reading …

இந்தோனேசியாவில் பயங்கரம்!

Comments Off on இந்தோனேசியாவில் பயங்கரம்!

மீண்டும் இந்தோனேஷியாவில் உள்ள பெரிய எரிமலைகளில் ஒன்றான செமேரு எரிமலை வெடிக்க தொடங்கியுள்ளது. இதனால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு நிலவி உள்ளது. அதிகமான எரிமலைகளை கொண்டுள்ள நாடு இந்தோனேஷியா. ஆண்டுதோறும் அதிகமான நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்பு சம்பவங்கள் இந்தோனேஷியாவில் பதிவாகின்றன. கடந்த ஆண்டில் இதே டிசம்பர் மாதத்தில் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள செமேரு எரிமலை வெடித்ததில் 51 பேர் பலியானார்கள். தற்போது இந்த எரிமலை மீண்டும் வெடிக்க தொடங்கியுள்ளது. 12,060 அடி உயரம் கொண்ட இந்த […]

Continue reading …

டிஜிபியின் சுற்றறிக்கை!

Comments Off on டிஜிபியின் சுற்றறிக்கை!
டிஜிபியின் சுற்றறிக்கை!

தமிழக டிஜிபி புதியதாக வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தமிழ்நாட்டில் போக்சோ வழக்கில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் சிறுவர், சிறுமியருக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக்குழு மற்றும் போக்சோ குழுவினர் பாலியல் வன்முறை தடுப்பு சட்டம் குறித்து மேற்கொண்ட ஆலோசனையின் அடிப்படையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு புதிய அறிவுறைகளை வழங்கியுள்ளார். அதன்படி, திருமண உறவு மற்றும் காதல் உறவுகளில் […]

Continue reading …

பிரான்ஸ் அதிபர் நம்பிக்கை!

Comments Off on பிரான்ஸ் அதிபர் நம்பிக்கை!

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உலக நாடுகளை ஒன்றிணைக்கும் சக்தி பிரதமர் மோடி மீது உள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜி20 உலக நாடுகளின் மாநாட்டை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு தலைமை தாங்கி நடத்தி வருகிறது. இவ்வாண்டு இந்தோனேஷியாவில் நடைபெற்ற உலக ஜி20 மாநாட்டில் அடுத்த ஆண்டிற்கான தலைமை இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியாவில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக இந்திய அரசு இப்போதிருந்தே தயாராகி வருகிறது. ஜி20 மாநாட்டை […]

Continue reading …

தனியா இருக்கும் பெண்கள் டார்கெட்..!

Comments Off on தனியா இருக்கும் பெண்கள் டார்கெட்..!

வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் மாவிலை கேட்பது போல சென்று திருடி வந்த பிரபல திருடனை போலீசார் கைது செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை சேர்ந்த ராணி என்ற 55 வயதான பெண் தனது வீட்டில் தனியே இருந்துள்ளார். அவரது கணவரும், மகனும் வெளியே வேலைக்காக சென்றிருந்த நிலையில் அவர்களது தூரத்து உறவினர் என சொல்லிக் கொண்டு 50 வயது நபர் ஒருவர் வந்துள்ளார். வீட்டு கிரஹபிரவேசத்திற்கு பத்திரிக்கை வைத்த அவர், வீட்டு வாயிலில் கட்ட மாவிலைகள் […]

Continue reading …

மீனவர்கள் நாளை முதல் கடலுக்கு செல்ல வேண்டாம்!

Comments Off on மீனவர்கள் நாளை முதல் கடலுக்கு செல்ல வேண்டாம்!

காற்றழுத்த தாழ்வு வங்க கடலில் தோன்றியுள்ளதன் காரணமாக மணிக்கு 65 கிலோமீட்டர் வரை சூறை காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, நாளை முதல் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளதை அடுத்து நாளை முதல் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி மேற்கு வடமேற்கு பகுதிக்கு பகுதியில் புயலாக […]

Continue reading …

பரந்தூர் விமானநிலையம் குறித்து தமிழக அரசு அறிவிப்பு!

Comments Off on பரந்தூர் விமானநிலையம் குறித்து தமிழக அரசு அறிவிப்பு!

சென்னையில் இரண்டாவது விமான நிலையம் பரந்தூர் அருகே அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. பரந்தூர் அருகே இரண்டாவது விமான நிலையம் அமைக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பொதுமக்களை சமாதானப்படுத்தி அந்த இடத்தில் விமான நிலையத்தை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்தநிலையில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பது குறித்து சர்வதேச ஒப்பந்தத்தை தமிழக அரசு அறிவித்து உள்ளது. விமான போக்குவரத்து வளர்ச்சி நிலைகளை ஆய்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு நிபந்தனை விதித்துள்ளதை […]

Continue reading …

மறைந்த நடிகரின் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்ற பிரபல நடிகர்!

Comments Off on மறைந்த நடிகரின் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்ற பிரபல நடிகர்!

கபடி வீரராக 2009ம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ஹரி வைரவன். அதன் பின் “குள்ளநரிக் கூட்டம்” உட்பட சில படங்களிலும் அவர் நடித்திருந்தார். நன்கு வளர்ந்து வந்த நிலையில் இவருக்கு சக்கரை நோய், இதய பிரச்சனைகள் மற்றும் சிறுநீரக செயலிழப்பு ஆகிய பிரச்சனைகள் இருந்துள்ளன. இதனால் அவர் கோமா நிலைக்கு சென்றார். அதன் பின்னர் சிகிச்சையில் தேறிவந்த நிலையில் சில் தினங்களுக்கு முன்னர் அவர் மரணம் அடைந்துள்ளார். இந்நிலையில் […]

Continue reading …

வேலையாளின் விநோதமான வழக்கு!

Comments Off on வேலையாளின் விநோதமான வழக்கு!

வேலை செய்பவர் ஒருவர் தனக்கு சம்பளம் தந்துவிட்டு வேலை ஏதும் தராத நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலை செய்யும் நிறுவனம் தனக்கு சம்பளம் குறைவாக தருவது, பணிநீக்கம் போன்ற பிரச்சினைகளுக்கு எதிராக பணியாளர்கள் போராடி வருகின்றனர். ஆனால் அயர்லாந்தில் ஒரு பணியாளர் நடத்தியுள்ள நூதன போராட்டம் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. அயர்லாந்து நாட்டை சேர்ந்த டெர்மோட் மில்ஸ் என்பவர் அங்குள்ள நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அந்த நிறுவனத்தில் இவருக்கு வருடத்திற்கு இந்திய மதிப்பில் […]

Continue reading …

திமுக சீராய்வு மனு தாக்கல்

Comments Off on திமுக சீராய்வு மனு தாக்கல்

சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்ட மசோதா குறித்த வழக்கு தீர்ப்பளிக்கப்பட்டது இந்த தீர்ப்பை எதிர்த்து திமுக சார்பில் தற்போது மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று மூன்று நீதிபதிகளும் செல்லாது என்று இரண்டு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்புக்கு திமுக உள்பட அதன் கூட்டணி கட்சிகள் கண்டனம் […]

Continue reading …