
கல்லூரி மாணவி ஒருவரை மின்சார ரயில் முன்பு தள்ளி படுகொலை செய்து தப்பி ஓடியவரை போலீசார் கைது செய்தனர். மாணவி இறந்த துக்கத்தை தாங்கிக் கொள்ளாத தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பரங்கிமலை ரயில்நிலையத்துக்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு, கல்லூரி மாணவி சத்யாவை தள்ளி படுகொலை செய்துவிட்டு சதீஷ் என்ற இளைஞர் தப்பி ஓடினார். இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மகளை இழந்த […]
Continue reading …
இந்திய தேர்தல் ஆணையம் குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதி எப்போது? என்பது குறித்து தகவல் வெளியிட்டுள்ளது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் நவம்பர் 12ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளது. குஜராத் மாநில சட்டசபை வரும் டிசம்பர் மாதத்துடன் நிறைவடையும் நிலையில் அதற்கு முன்னரே தேர்தல் நடைபெற வேண்டும். இந்நிலையில் வரும் டிசம்பர் மாதம் அல்லது நவம்பர் இறுதியில் குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத் மாநில […]
Continue reading …
அமெரிக்க அதிகாரிகள் டுவிட்டர் ஒப்பந்தத்திலிருந்து எலான் மஸ்க் விலகியதை குறித்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டுவிட்டர் நிறுவனத்தை வாங்க கடந்த சில மாதங்களுக்கு முன் எலான் மஸ்க் முடிவு செய்தார். ஆனால் அதன் பின் டுவிட்டரில் போலி கணக்குகள் அதிகமாக இருப்பதால் அதை வாங்குவதில் இருந்து பின்வாங்கினார். எலான் மஸ்க்கிற்கு எதிராக டுவிட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவ்வகையில் டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் […]
Continue reading …
நடிகர் விக்ரம் நடித்த “கோப்ரா” மற்றும் “பொன்னியின் செல்வன்” ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீசான நிலையில் அடுத்ததாக அவர் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் இயக்கும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். கடந்த சில வாரங்களாக இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 18ம் தேதி தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் கட்ட படப்பிடிப்பை ஆந்திராவில் உள்ள கடப்பாவில் தொடங்க பா.ரஞ்சித் திட்டமிட்டுள்ளதாகவும் 15 நாட்கள் ஆந்திராவிலும் அதையடுத்த அடுத்த கட்ட படப்பிடிப்பு […]
Continue reading …
தீவிரவாதிகளுடன் போராடி குண்டடிப்பட்டு இறந்த ராணுவத்தின் ஸூம் நாய்க்கு ராணுவத்தினர் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். காஷ்மீரில் இந்திய ராணுவத்தினர் மேற்கொண்ட தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த மோப்ப நாய் ஸூம். சமீபத்தில் ஒரு பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்த நிலையில் தீவிரவாதிகளை கண்டறிய ஸூம் அனுப்பப்பட்டது. அப்போது தீவிரவாதிகள் சுட்டதால் ஸூம் மீது இரண்டு தோட்டாக்கள் பாய்ந்தது. பின் ராணுவத்துடன் நடந்த மோதலில் அந்த தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிருக்கு ஆபத்தான […]
Continue reading …
சென்னை பல்கலைக்கழகம் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை வழங்குவதாக அறிவித்துள்ளது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பல்கலைகழகத்தில் இளங்கலை படிப்பில் 2015 மற்றும்- 2016 கல்வியாண்டிற்கு முன்பாகவும், முதுகலை படிப்பில் 2019 மற்றும்- 2020ம் கல்வியாண்டிற்கு முன்பாகவும் படித்து அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. வரும் நவம்பர் மாதம் அல்லது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற இருக்கும் செமஸ்டர் தேர்வில் மேற்கண்ட கல்வி […]
Continue reading …
மத்திய அரசு இனி 4ஜி போன்கள் தயாரிப்பை நிறுத்தப்போவதாக வெளியிட்டுள்ள தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளது. தற்போது இந்தியா முழுவம் 4ஜி சேவை பயன்பாட்டில் உள்ளது. நாடு முழுவதும் மக்கள் இதற்கான 4ஜி ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் 4ஜியை விட அதிகமான இணைய வேகம் கொண்ட 5ஜி அலைக்கற்றை சேவை இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி 5ஜி சேவைகளை தொடங்கி வைத்த நிலையில் தீபாவளி முதல் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள் தீவிரமாக செயல்பட்டு […]
Continue reading …
சென்னை மற்றும் மைசூர் இடையே முதல் வந்தே பாரத் ரயில் முதல்முறையாக இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நவம்பர் 10ம் தேதி முதல் வந்தே பாரத் சென்னை மற்றும் மைசூருக்கிடையே இயக்கப் போவதாகவும் இந்த ரயில் இயக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தென்னிந்தியாவின் முதல் செமி புல்லட் ரயிலான இந்த வந்தே பாரத் ரயில் 3 மணி நேரத்தில் சென்னையிலிருந்து மைசூரை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மற்றும்- மைசூர் இடையே 483 கிலோமீட்டர் […]
Continue reading …
இனி சனிக்கிழமைகளும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவிலுள்ள அனைத்து வங்கிகளும் இரண்டாவது மற்றும் நான்காவது சனி மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மற்ற சனிக்கிழமைகளில் அரை நாள் இயங்கி வருகிறது. இந்நிலையில் வங்கிகளுக்கு அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறையளிக்க பரிசீலனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு பதிலாக திங்கள் முதல் வெள்ளி வரை உள்ள வேலை நாட்களில் வேலை நேரம் அதிகரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. வங்கிகளுக்கு இனி அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை என்ற […]
Continue reading …
பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார். “பூவே பூச்சூடவா,” “நாயகன்,” “அலைபாயுதே,” “காதல் தேசம்“ உட்பட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் பிசி ஸ்ரீராம். இவர் தேசிய விருதுகள் மட்டுமல்லாது பல விருதுகள் வென்றுள்ளார். தற்போதும், முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இவர் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இவர், தன் சமூக வலைதளங்களில் அவ்வப்போது சமூகம் தொடர்பாக கருத்துகள் பதிவிட்டு வருவது வழக்கம். அந்த வகையில், முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின், தன் […]
Continue reading …