Home » Posts tagged with » Netrikkan (Page 433)

ராஜமவுலியின் டுவிட்டர் வீடியோவால் சர்ச்சை!

Comments Off on ராஜமவுலியின் டுவிட்டர் வீடியோவால் சர்ச்சை!

இயக்குனர் ராஜமவுலி அவரது டுவிட்டர் பக்கத்தில் தற்போது பகிர்ந்துள்ள வீடியோவால் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தை நீண்ட கால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இத்திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் என பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்போது படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்ட நிலையில் 3 நாட்களில் மட்டும் உலகம் முழுவதும் சுமார் 200 கோடிக்கு மேல் வசூலாகியுள்ளது. […]

Continue reading …

எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

Comments Off on எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

இன்று இமாச்சல பிரதேச மாநிலம் பிலாஸ்பூரியில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை பிரதமர் மோடி நாட்டுக்காக அர்ப்பணித்தார். கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் இமாச்சல் பிரதேச மாநிலம் பிலாஸ்பூர் என்ற பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 4 ஆண்டுகளில் இந்த மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரூ.1470 கோடி மதிப்பீட்டில் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. சுமார் 247 ஏக்கர் பரப்பரளவில் அமைந்துள்ள இந்த மருத்துவமனையில், […]

Continue reading …

மோடி உக்ரைன் அதிபருடன் தொலைபேசியில் உரையாடல்!

Comments Off on மோடி உக்ரைன் அதிபருடன் தொலைபேசியில் உரையாடல்!

பிரதமர் மோடி உக்ரைன் அதிபருடன் தொலைபேசியில் பேசியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிறிய நாடான உக்ரைனுடன் உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இப்போர் ஏழரை மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகின்றது. சமீபத்தில், உக்ரைனின் பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியதாக அதிபர் புதின் அறிவித்தார். ஏற்கனவே, உஸ்பெகிஸ்தானில் நடந்த ஷாங்காய் உச்சி மாநாட்டில் ரஷிய அதிபரை நேரில் சந்தித்த பிரதமர் மோடி, போரை முடிவுக்குக் கொண்டு வருவது பற்றி பேசியிருந்தார். இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் […]

Continue reading …

ரயில்கள் இனி மின்னல் வேகம்!

Comments Off on ரயில்கள் இனி மின்னல் வேகம்!
ரயில்கள் இனி மின்னல் வேகம்!

இந்திய ரயில்வே இனி ரயில்கள் மின்னல் வேகம் செய்யும் என்று அறிவித்துள்ளது. இனி அனைத்து ரயில்களின் வேகமும் 5 சதவீதம் உயர்த்தப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இந்திய ரயில்வே சார்பில் இயக்கப்படும் ரயில்களில் தினமும் சுமார் 2 கோடியே பயணிகள் பயணம் செய்கின்றனர். இவ்வாண்டிற்கான ரயில் பாதை அட்டவணை வெளியாகியுள்ளது. இதில் 500 எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், 130 ரயில் சேவைகள் சூப்பர் பாஸ்ட் வகையாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து ரயில்களின் வேகமும் […]

Continue reading …

மோசடி கும்பலில் சிக்கிய தமிழர்கள் மீட்பு!

Comments Off on மோசடி கும்பலில் சிக்கிய தமிழர்கள் மீட்பு!

தொழில்நுட்ப மோசடி செய்யும் கும்பலிடம் சிக்கிய 13 தமிழர்கள் மியான்மரிலிருந்து இன்று தமிழகம் வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் தாய்லாந்தில் ஐடி துறையில் வேலை வாங்கி தருவதாக விளம்பரம் செய்து, ஏஜெண்டுகள் மூலமாக இந்திய ஐடி பணியாளர்கள் பலர் தாய்லாந்திற்கு பதிலாக மியான்மருக்கு கடத்தி செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவ்வாறாக கடத்தி செல்லப்பட்ட நபர்களை கொண்டு டிஜிட்டல் மோசடி செயல்களில் அவர்களை ஈடுபடுத்தியதாகவும், 17 மணி நேரம் வேலை வாங்கி கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. […]

Continue reading …

அர்ஜூன் சம்பத்தின் கருத்து!

Comments Off on அர்ஜூன் சம்பத்தின் கருத்து!

இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜூன் சம்பத் திருமாவளவள், சீமான் கட்சிகளை தடை செய்வதோடு, இருவரையும் கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் ஆகியோர் பேசி வருவதாகவும் இதையடுத்து இருவரையும் கைது செய்து அந்த இருவருடைய கட்சிகளையும் தடை செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார். […]

Continue reading …

பெண்கள் டிக்கெட் எடுத்தும் பயணிக்கலாம்!

Comments Off on பெண்கள் டிக்கெட் எடுத்தும் பயணிக்கலாம்!

போக்குவரத்துத்துறை வாய்மொழியாக டிக்கெட் எடுத்தும் பெண்கள் பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்று அறிவித்துள்ளது. பேருந்தில் பயணம் செய்யும் பெண்கள் டிக்கெட் எடுத்து பயணம் செய்ய விரும்பினால் டிக்கெட் எடுத்து பயணம் செய்யலாம். அவ்வாறு டிக்கெட் கேட்கும் பெண்களுக்கு டிக்கெட் கொடுக்குமாறு வாய்மொழியாக நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழாவில் பேசிய போது பெண்கள் ஓசியில் பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள் என்று கூறியது சர்ச்சைக்குள்ளானது. இதையடுத்து பல பெண்கள் தாங்கள் […]

Continue reading …

கருணாஸ் கேள்வி!

Comments Off on கருணாஸ் கேள்வி!

கருணாஸ் ராஜ ராஜ சோழன் காலத்தில் ஏது இந்து? ஏது இந்தியா? என கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது, “ராஜராஜசோழன் காலத்தில் ஏது இந்து? ஏது இந்தியா? இந்தியா என்ற பெயரே ஆங்கிலேயர்கள் வணிகத்திற்காக உருவாக்கியது; இந்து மதத்தையும் அவர்களே உருவாக்கினார்கள். இந்தியா என்பது ஒரு தேசமில்லை. அது பல தேசங்களின் ஒன்றியம் ஆரியம் எப்போதும் ஒன்றை எதிர்க்கும். அது முடியாது என்று தெரிந்து விட்டால் அதை தனதாக்கிக் கொள்ளும்; அப்படித்தான் எல்லாவற்றையும் தனக்கானதாகவே மாற்றிக்கொண்டது. இப்போதும் […]

Continue reading …

பரபரப்பாக இயங்கி வரும் லோகேஷ்!

Comments Off on பரபரப்பாக இயங்கி வரும் லோகேஷ்!

நடிகர் விஜய் 67 படத்திற்கான விறுவிறுப்பான வேலைகளில் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். “விக்ரம்“ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியானது. படத்தில் கதாநாயகி என்று யாருமில்லை என்றும் அதுபோலவே படத்தில் பாடல்களும் இல்லாமல் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் இப்போது ஒரு முக்கிய வேடத்தில் சமந்தா நடிக்கப் போவதாக தகவல்கள் பரவி […]

Continue reading …

வரலாற்று திரைப்படமா “வேள்பாரி”?

Comments Off on வரலாற்று திரைப்படமா “வேள்பாரி”?
வரலாற்று திரைப்படமா “வேள்பாரி”?

“வேள்பாரி” திரைப்படமும் “பாகுபலி,” “பொன்னியின் செல்வன்” திரைப்பட வரிசையில் உருவாகிறதா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் உருவாகி உள்ளது. மக்களவை உறுப்பினருமான சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலை இயக்குனர் ஷங்கர் படமாக்க உள்ளதாக கூறப்படுகிறது. “பாகுபலி” மற்றும் “பொன்னியின் செல்வன்” போன்ற வரலாற்று திரைப்படங்களின் வெற்றியையடுத்து மறுபடியும் ஒரு வரலாற்று புனைவு திரைப்படம் உருவாக உள்ளது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இப்படம் அடுத்தகட்டத்துக்கு நகர்ந்தால் அதில் கதாநாயகனாக கேஜிஎப் படப்புகழ் யாஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்று […]

Continue reading …