மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் மறைவுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல்!

Filed under: இந்தியா |

மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சி நிறுவனருமான ராம் விலாஸ் பஸ்வான் நேற்று இரவு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இவருடைய மறைவுக்கு பல தலைவர்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இதனை குறித்து அவருடைய பதிவில்; ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த மத்திய அமைச்சர் திரு.ராம்விலாஸ் பஸ்வான் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மனவேதனை அடைந்தேன்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.