கொரோனா வைரஸ் காரணத்தினால் இந்த ஆண்டு நடக்கவிருந்த ஐபில் போட்டி தற்போது வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டி20 ஆசிய கோப்பை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து டி20 உலக கோப்பை பற்றி இன்று முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
தற்போது ஐபிஎல் இல்லாத இந்த ஆண்டை நினைத்தால் கடினமாக இருக்கிறது என முன்னாள் தென் ஆப்பிரிக்கா அதிரடி பீல்டர் ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார்.
இதனை பற்றி ஜான்டி ரோட்ஸ் கூறியது: ஐபிஎல் இல்லாத இந்த ஆண்டை கடந்து போவதை நினைத்தால் கஷ்டமாக உள்ளது. 2008ஆம் ஆண்டு முதல் அட்டவணையில் ஒரு பகுதி இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஐபில் போட்டியை கோலாகலமாக நடத்த பிசிசிஐ முயற்சி செய்கிறது.
ஐபிஎல் தொடர் நிதி மற்றும் வருங்கால வீரர்களுக்கு மிகவும் முக்கியமானது. உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் விளையாடுகிறார்கள். இதனால் ஐபிஎல் இல்லாத இந்த ஆண்டை நினைத்தால் கடினமாக உள்ளது.
இவ்வாறு ஜான்டி ரோட்ஸ் தெரிவித்தார்.