தேனி மாவட்டம் போலி செய்தியை சமுக வலைதலங்களில் பரப்பிய தங்க தமிழ் செல்வன் மகன் நிஷாந்த் மீது புகார் .

Filed under: தமிழகம் |

தேனி மாவட்டம்
போலி செய்தியை சமுக வலைதலங்களில் பரப்பிய தங்க தமிழ் செல்வன் மகன் நிஷாந்த் மீது புகார் .

தேனி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வி.டி.நாராயணசாமி குறித்து பாலிமர் நியூஸ்,தந்தி டிவி,நியூஸ் தமிழ் டிவி,நியூஸ்7 டிவி ஆகியவற்றின் லோகோவை பயன்படுத்தி போலியாக வீடியோ மற்றும் போட்டோக்களுடன் கூடிய கார்டுகளை பயன்படுத்தி போலி செய்திகளை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் பரப்பிய திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனின் மகன் நிஷாந்த் மற்றும் தங்க தமிழ்ச்செல்வனின் உதவியாளராக அவர் உடனேயே பயணிக்கும் திருமலைக்கொழுந்துராஜசேகரன் மற்றும் அமமுகவை சேர்ந்த விஜய்ராஜாங்கம் மற்றும் பொன்சிவா, ஈஸ்வரன் ராஜா பெரியகுளம், கவியரசன், மற்றும்

பா.ஜ.க சரவணன் உதயம் ஆகிய ஏழு பேர் மீது தேனி கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் TKR.கணேசன் மற்றும் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் தலைமையில் சுமார் 15க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இன்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடமும்,மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் புகார் அளித்தனர்.