திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும் – பிரதமர் ட்விட்டரில் பெருமிதம்!

Filed under: இந்தியா |

பிரதமர் மோடி அவர்கள் அவருடைய ட்விட்டரில் பக்கத்தில் திருக்குறளையும் மற்றும் திருவள்ளுவரையும் புகழ்ந்து பதிவிட்டுள்ளார்.

திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும். உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், ஊக்கம் தரும் கருத்துக்களை உள்ளடக்கிய பொக்கிஷமாகும்.

தெய்வப்புலவர் திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை. இந்தியா முழுதிலுமுள்ள இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயனுருவர் என நம்புகிறேன்.