#BREAKING: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு கொரோனா தொற்று உறுதி!

Filed under: உலகம் |

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பின் ஆலோசகரான ஹோப் ஹிக்ஸுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

https://twitter.com/realDonaldTrump/status/1311859538279239686

இதன் பின்பு அதிபர் டொனால்ட் டிரம்பும் மற்றும் அவருடைய மனைவி மெலனியா டிரம்பும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டனர். அந்த பரிசோதனையில் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

https://twitter.com/realDonaldTrump/status/1311892190680014849

மேலும், அமெரிக்காவில் நவம்பர் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து வரும் நிலையில் டிரம்புக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.