பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியா தூதரக அதிகாரிகள் இரண்டு பேர் மாயம்!

Filed under: இந்தியா |

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் இருக்கும் இந்தியத் தூதரக அதிகாரிகள் இரண்டு பேர் திடீரென காணவில்லை என தகவல் வெளியாகி வருகிறது. இதனை பாகிஸ்தான் அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். பின்னர் இரண்டு பேரையும் இரண்டு மணி நேரத்துக்கு மேல் தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். விரைவாக இருவரையும் கண்டுபிடிக்க வேண்டும் இந்தியா பாகிஸ்தானுக்கு வலியுறுத்தி உள்ளது.

மேலும், இதற்கு முன்னர் டெல்லியில் வேலை பார்த்து வந்த பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இரண்டு பேரை இந்தியா நாட்டைவிட்டு அனுப்பியது. மே 31ஆம் தேதி டெல்லியில் உள்ள கரோல் பா பகுதியில் இவர்கள் இரண்டுபேரிடமிருந்து ரகசிய ஆவணங்களை கைப்பற்றப்பட்டது. இதனை தொடர்ந்து இந்தியாவிற்கு ஏதிராக உளவு வேலையில் ஈடுபட்டன என்று இரண்டு பேரையும் ஜூன் 1ஆம் தேதிபாகிஸ்தான் இஸ்லாமாபாத்துக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்காக இந்தியா தூதரக அதிகாரிகள் கடத்திருக்கலாம் அல்லது சிறைபிடித்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.