உக்ரைன் நாட்டின் அதிபர் மனைவி கொரோனா வைரசால் பாதிப்பு!

Filed under: உலகம் |

உக்ரைன் நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலேனா ஜெலன்ஸ்காவுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

ஆனால், அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அவருடைய குழந்தைகள்கொரோனா வைரசால் பாதிக்கப்படவில்லை என்பதனை சமூக வளையதளமான இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் நலமுடன் இருப்பதாகவும், வெளிநோயாளி போல் சிகிச்சை பெற்று வருவதாவும் மற்றும் அவரை தனிமைப்படுத்தி வைத்துள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.