மகாராஷ்டிரா கவர்னர் மாளிகையில் 16 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Filed under: இந்தியா |

உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசால் இந்தியாவில் எட்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இந்த வைரசால் இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் மும்பை, புனே மற்றும் நாக்பூர் நகரங்களில் அதிக பாதிப்பு உள்ளது. இதில் 70க்கும் மேற்பட்ட காவலர்கள் பலியாகியுள்ளனர் மற்றும் 6 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் கவர்னராக பகத் சிங் கோஷ்யாரி இருக்கிறார். தற்போது கவர்னர் மாளிகையில் 16 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. ஆனால், கவர்னருக்கு கொரோன பாதிப்பில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பற்றி கவர்னர் கோஷ்யாரி கூறியது: நான் நலமாக உள்ளேன். கொரோனா பரிசோதனை செய்ததில் எனக்கு கொரோனா இல்லை என முடிவு வந்தது. தொற்றின் அறிகுறி கூட இல்லை. என்னை தனிமைப்படுத்தி கொண்டேன் என வெளிவந்த செய்தி தவறு என தெரிவித்தார்.