பா.ஜ.க மூத்த தலைவரான உமா பாரதிக்கு கொரோனா தொற்று உறுதி!

Filed under: இந்தியா |

பா.ஜ.க மூத்த தலைவரான உமா பாரதிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கானோர் தினதோறும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகமாக பரவி வந்தாலும், குணமைவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் பா.ஜ.க மூத்த தலைவரான உமா பாரதிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதனை குறித்து ட்விட்டர் பதிவில்; நான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதில் கொரோனா இருப்பது உறுதியாகியது. இதனால் நான் ஹரிதுவார் ரிஷிகேஷில் தனிமைப் படுத்திக் கொண்டேன். பின்பு அடுத்த நான்கு தினங்களில் மீண்டும் பரிசோதனை மேற்கொள்வேன். அதில் நெகட்டிவ் என வரவில்லை என்றால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவேன்.

மேலும், என்னுடைய அண்மையில் தொடர்பில் இருந்தார்கள் தனிமைப்படுத்திக் கொள்ளமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.