மதுரையில் கப்பலூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் வைத்திருக்கும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பது பற்றி அமைச்சர் உதயகுமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் வினய் ஆகியோர் ஆய்வு செய்துள்ளனர்.
இந்த ஆய்வுக்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியது; முதல் ஊரடங்கு உத்தரவின் போது தளர்வு தரப்பட்டு, தானியங்களை சேமித்து வைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. பின்னர் 28 லட்சம் கூடுதல் மெட்ரிக் டன் நெல் கொரோனா சமயத்தில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த கொரோனா பாதிப்பால் வேலைவாய்ப்பின்மை குறைந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு முன்பு 8.3 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை, தற்போது 2.6 சதவீதமாக குறைந்துள்ளது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.