கொரோனா வைரஸ் காரணத்தினால் மூன்று மாதத்திற்கும் மேலாக தியேட்டர்கள் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் எடுத்து முடித்து தயாராக இருக்கும் படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
தற்போது நடிகை அனுஷ்கா நடித்துள்ள படம் நிசப்தம். இந்த படம் வெளியிடுவதற்கு தயாராக இருக்கிறது. அனுஷ்கா உடல் எடையை குறைத்து புதிய பொலிவுடன் இருக்கிறார்.
தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராக தயாரிக்க உள்ளதாகவும், இருவருக்கும் சமமான கதாபாத்திரம் உள்ளது எனவும் கூறப்படுகிறது.
மேலும், இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் ஐசரி கணேசன் தயாரிக்க உள்ளதாகவும் மற்றும் விஜய் இயக்குகிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.