கொரோனா வைரஸ் யார் பரப்பியது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என இந்தியா உள்ளிட்ட 62 நாடுகள் வலியுறுத்தி வருகிறது.
உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் சீனாவில் உள்ள உகான் நகரில் இருந்து தான் பரவ தொடங்கியது. இந்த வைரஸ் உகானில் இருக்கும் ஆய்வகத்தில் தான் பரவியது என பல்வேறு தகவல்கள் கூறப்படுகிறது.
இந்த வைரஸ் தாக்கத்திற்கு சீனா தான் பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும் என அமெரிக்கா உள்பட நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் எப்படி உருவாகியது என்பதை கண்டறிய வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் உருவானது பற்றி சரியான விசாரணை நடத்த வேண்டும் என 62 நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளது. பின்பு இன்று உலக சுகாதார அமைப்பின் 73வது கூட்டத்தில் விசாரணையின் தீர்மானம் கொண்டு வரப்பட இருக்கிறது.
இதற்காக இந்தியா உள்பட பல நாடுகள் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.