வெக்காளியம்மன் திருக்கோவிலில் தினம்தோறும் 100-நபர்களுக்கு வழங்கப்படும் அன்னதானத்தின் எண்ணிக்கை உயர்த்தப்படுமா….?
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் மனைவி திருமதி.துர்கா அவர்கள் தனது மகள் மற்றும் மருமகனுடன் ஆடி மாத வெள்ளிக்கிழமையான இன்று (26.07.2024) சென்னையிலிருந்து_திருச்சி உறையூரில் அருள்பாலிக்கும் வெக்காளி அன்னையை தரிசித்து செல்கிறார்.
ஏனென்றால் அன்னையின் அருள் மழை அப்பேற்பட்டது. இப்படியான கருணையே வடிவான காக்கும் தெய்வத்தின் சன்னதியில் தமிழக அரசு அறநிலையத்துறை சார்பில் தினம்தோறும் சுமார் 100-நபர்களுக்கு மட்டுமே அன்னதானம் வழங்க அனுமதி வழங்கி_அதற்கான டோக்கன் வழங்கப்படுவது என்பது ஏற்புடையதாக இல்லை என பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள்.
மேலும் ஆடி மாத வெள்ளியான இன்று பல்லாயிரகணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் பொதுமக்கள் அம்மனை தரிசித்துவிட்டு_ அன்னதானத்தில் வரிசையில் நின்று உணவருந்தாமல் திரும்பி செல்வதை பார்க்கையில் மனம் வேதனைப்படுகிறது.
எனவே திருச்சி மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான திரு.K.N.நேரு அவர்களும், தமிழக அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் திருச்சி உறையூர் வெக்காளியம்மன் திருகோவிலில் தினம்தோறும் சுமார் நூறு நபர்களுக்கு வழங்கப்படும் அன்னதானத்தின் எண்ணிக்கையை உடனடியாக உயர்த்தி முறையான உத்தரவு பிறப்பிக்க மக்கள் நீதி மய்யம் கட்சி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் வலியுறுத்தி கேட்டுகொள்கிறோம்.