பெண் இன்ஜினியர் உள்ளிட்ட 8 பேர் அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலியாகி உள்ளனர்.
சமீப காலமாகவே அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு நடந்து வருவது அதிகரித்துள்ளது. சில நாட்களுக்கு முன், பள்ளிக்கூடம், கல்லூரி வளாகம், கேளிக்கை விடுதிகளில் துப்பாக்கிச் சூடு நடந்தது. டெக்சாஸ் மாகாணத்தில் டெல்லெஸ் நகரில் உள்ள வணிக வளாகத்தில் கடந்த சனிக்கிழமை மாலையில் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில், மவுரிஹோ ஹர்சியா (33) என்ற நபர் நடத்திய, இந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலியாகினர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மவுரியா ஹர்சியாவை சுட்டுக் கொன்றனர். ஹர்சியா நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சரோர் நகர் பகுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யா தடிகொண்டா (27) என்ற பெண் இன்ஜினியர் பலியானதாக தகவல் வெளியாகிறது. இவர் நீதிபதியின் மகளாவார்.