அமைச்சர் மெய்யநாதன் திடீர் உடல்நலக்குறைவு!

Filed under: அரசியல்,தமிழகம் |

அமைச்சர் மெய்யநாதன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவருக்கு கடந்த சில மணி நேரங்களாக மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அமைச்சர் மெய்யநாதன் சென்னைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தனி கார் மூலம் மருத்துவ குழுவினர் உதவியுடன் சென்னைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார் என்றும் கூறப்படுகிறது. அமைச்சர் மெய்யநாதன் சென்னை வந்தவுடன் அவருக்கு சிகிச்சையளிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.