ஆபாசப் பட நடிகையாக மாறிய ரேஸ் வீராங்கனை!

Filed under: உலகம்,சினிமா |

பிரபல கார் ரேஸ் வீராங்கனை ஒருவர், திடீரென பாலியல் பட நடிகையாக மாறியிருக்கிறார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் ரெனீ கிரேஸி ( Renee Gracie), 25 வயதான இவர், முழு நேர கார் ரேஸ் வீராங்கனை. சூப்பர் கார் ரேஸ் வீராங்கனையான இவர், கடந்த 14 வருடங்களாக, கார் ரேஸில் பங்கேற்று கலக்கி வந்தவர். பல பரிசுகளையும் பெற்றுள்ளார், இவருக்கு கடந்த சில வருடங்களாகக் கடும் பொருளாதார சிக்கல். தனது பணப் பிரச்னையை, கார் ரேஸ் மூலம் தீர்க்க முடியவில்லை, இதனால் வருத்தமடைந்த அவர், கார் ரேஸை விட்டுவிட முடிவு செய்தார். வேறு என்ன செய்யலாம் என்று நினைத்த போதுதான் பாலியல் பட உலகம் பற்றிய சிந்தனை தோன்றியது. அதில் நடிகையாக மாறலாம், அதில் பணம் கொட்டும் என்று முடிவு செய்தார், தந்தை ஆதரவு அதன்படியே ஆகிவிட்டார்.

நினைத்தது போலவே இப்போது அவருக்கு பணம், கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. இதுபற்றி ரெனீ கிரேஸி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: பாலியல் பட நடிகை ஆவது என்ற இந்த முடிவை எடுத்ததற்கு எனது தந்தையும் குடும்பத்தினரும் ஆதரவு தெரிவித்தனர். கடனை அடைத்தேன் இது எனக்கு இன்னொரு தொழில் போலதான். முதல் வாரம் குறைவாகத்தான் வருமானம் வந்தது. இப்போது அந்த வெப்சைட்டு வழக்கத்தை விட 7 ஆயிரத்துக்கும் அதிமான சப்ஸ்கிரைபர்ஸ் கிடைத்துள்ளனர். இதனால் எனக்கும் அதிக வருமானம் கிடைக்கிறது. 30 வருடமாக இருந்த எங்கள் குடும்பத்துக்கான வீட்டுக்கடனை 12 மாதத்திலேயே அடைத்துவிட்டேன். இவ்வாறு கூறியிருக்கிறார் ரெனீ கிரேஸி. இந்த தொழிலில் மகிழ்ச்சியாக இருக்கிறேன், இந்த முடிவு எந்த வருத்தத்தையும் தரவில்லை. பொருளாதார நிலை சிறப்பாக இருக்கிறது. பாலியல் பட நடிகையாக வாரத்துக்கு 25 ஆயிரம் டாலர் சம்பாதிக்கிறேன். இது எனக்கு பெரிய உதவியாக இருக்கிறது, தேவையாகவும் இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார். ரேஸ் வீராங்கனை ஒருவர் பாலியல் பட நடிகையாக மாறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.